Scene: "மூன்று படங்களில் சூர்யா சாருடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன்; ஆனால்..."- நஸ்ரியா
கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சீன்' (Scene).
சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, நஸ்லன், லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுஷின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது.
நாளை (நவ.6) படம் வெளியாக இருக்கும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் நஸ்லன், நஸ்ரியா இருவரிடமும் சூர்யாவுடன் பணியாற்றியது குறித்து கேட்கப்பட்டிருக்கிறது.
சூர்யா குறித்து பேசிய நஸ்லன், "சாருடன் நடிப்பது எனக்கு சர்ரியல் மொமென்ட்டாகத்தான் இருந்தது. நான் என்ஜாய் செய்து நடித்தேன். படத்தின் பூஜை நிகழ்ச்சியில்தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன்.
பிறகு படப்பிடிப்புத் தளத்தில்தான் பார்த்தேன். அதற்கு முன் 'லோகா' படம் ரிலீஸ் ஆன சமயத்தில் வீடியோ காலில் அழைத்துப் பாராட்டினார். அவருடன் இணைந்து பணியாற்றியது சந்தோஷமாக இருக்கிறது" என்றிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய நஸ்ரியா, "சூர்யா சார் சொன்னது போல முன்பு இரண்டு, மூன்று படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன். ஆனால், இந்தப் படத்தின் மூலம் எனது கனவு நனவாகிவிட்டது.
சாருடைய டிஸ்ப்ளின், கடின உழைப்பு பற்றி எல்லோரும் சொல்வார்கள். அவர் ஒரு சிறந்த மனிதர். ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொள்வோம்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
from விகடன்
Comments