தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது இவர்களது நடிப்பில் 'ரணபாலி' படமும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான `காஃபி வித் கரண்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் இந்தித் திரைப்படங்களான 'அனிமல்', 'தம்மா', 'காக்டெய்ல் 2' ஆகியவற்றில் ரஷ்மிகாவின் இந்தி உச்சரிப்பு சமூக வலைத்தளங்களில் டிரோல் செய்யப்பட்டது குறித்து தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேட்டிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, "என் பேச்சில் தென்னிந்திய உச்சரிப்பு இருப்பதாகக் கூறுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள்.
எனவே, என் பேச்சில் அந்த உச்சரிப்பு இருப்பது இயல்பானதுதான். அதைத் தவறாகப் பார்ப்பது முட்டாள்தனம்.
எனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே நடிப்பு, மொழி, உச்சரிப்பு எனப் பல விஷயங்களுக்காக விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வருகிறேன்.

ஆனால், எதற்காகவும் என்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ள விரும்பியதில்லை. ஒரே ஒரு துறையில் மட்டும் பணியாற்றாமல், அனைத்து மொழித் திரைப்படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
from விகடன்
Comments