"தனுஷ் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள்.!"- பேரரசு கூறியதென்ன?

இயக்குநர் பேரரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " மன்சூர் அலிகான் கட்சி ஆரம்பித்தார். தற்போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கலாம். நாளை கிங்ஸ்லி கூட கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தனுஷ்
தனுஷ்

ஆசைக்கு கட்சி ஆரம்பித்தெல்லாம் மக்களை ஏமாற்ற முடியாது. ஆழ் மனதில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அப்படி இருந்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தனுஷ் வரலாம் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் வரி பணத்தை சுருட்டாமல் இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from விகடன்

Comments