Hanuman Ansh: 'சின்ன கல்லு, பெத்த லாபம்' - பாலிவுட்டில் கவனம் ஈர்க்கும் ஹனுமான் அன்ஷ்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை. பல கோடி ரூபாய் பட்ஜெட்டும் இல்லை; பெரிய விளம்பரங்களும் இல்லை. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பாராத வசூலைக் குவித்து பாலிவுட்டில் கவனம் ஈர்த்திருக்கிறது ‘ஹனுமான் அன்ஷ்’.

நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை விஷால் சதுர்வேதி இயக்கியுள்ளார்.

Hanuman Ansh
Hanuman Ansh

₹2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ஆரம்பத்தில் பெரிய வசூலைப் பெறவில்லை. முதல் இரண்டு வாரங்களில் சுமார் ₹1.5 கோடி மட்டுமே வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், மூன்றாவது வாரத்திலிருந்து ரசிகர்களின் வரவேற்பு அதிகரிக்க, வசூலும் உயரத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவில் இப்படம் ₹160 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

சின்ன முதலீட்டில் பெரிய லாபத்தைச் சம்பாதிக்கும் படங்கள் ஒவ்வொரு வருடமும் பட்டியலிடப்படத்தான் செய்கின்றன. ஆனால், இந்த வருடம் அந்தப் பட்டியலில் அதிகமான படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழில் ‘யூத்’, ‘ப்ளாஸ்ட்’, 'தாய்க்கிழவி' போன்ற படங்களும், மலையாளத்தில் ‘வாழ 2’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ போன்ற படங்களும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூலை அள்ளியிருக்கின்றன.

 'யூத்' படம்
'யூத்' படம்

அதேபோல், ஆங்கிலத்திலும் ‘அப்செஷன்', 'பேக்ரூம்ஸ்' உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் சீன மொழியில் வெளியான 'நியூ லாய்' என்கிற அனிமேஷன் படமும் பெரிய வசூலை அள்ளியது.

ஆனால், மேற்கண்ட பட்டியலிலிருந்து இப்படம் வேறுபடும். மேலே குறிப்பிட்ட படங்களை மக்கள் கண்டெண்டிற்காகச் சென்று பார்த்தனர்.

ஆனால், இந்தச் சீன படத்தின் முதிர்ச்சியற்ற கதையையும் மேக்கிங்கையும் ஜாலியாக நண்பர்களுடன் கிண்டல் செய்து பார்ப்பதற்காகத் திரையரங்குகளுக்கு மக்கள் சென்றிருந்தனர்.



from விகடன்

Comments