Immortal: “கயாடு எத்தனை படங்கள் நடித்தாலும் இந்தப் படம்தான் அவங்களோட BEST” - ஜி.வி. பிரகாஷ் குமார்

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கும் படம் 'இம்மார்ட்டல்'.

ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் 'இம்மார்ட்டல்' படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஆக. 30) நடைபெற்றது.

'இம்மார்ட்டல்'  படம்
'இம்மார்ட்டல்' படம்

இதில் கலந்துகொண்டு பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், "இந்தப் படம் இந்திய சினிமாவிற்கே ஒரு புதிய ஜானராக இருக்கும்.

இயக்குநர் கதை சொல்லும்போது ஹாலிவுட் படம் மாதிரிதான் இருந்தது. கேட்பதற்கும் மிகவும் ஆர்வமாக இருந்தது.

இந்தப் படம் புது முயற்சியாக இருக்கும். கயாடு லோஹர் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் அவருடைய பெஸ்ட்டான படமாக இருக்கும். அந்த அளவிற்கு நேரம் எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஜி.வி பிரகாஷ்
ஜி.வி பிரகாஷ்

கயாடு லோஹர் ரசிகர்களும் இந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்கலாம். எல்லோரும் இந்தப் படத்தை திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். நிச்சயம் வொர்த்தான ஒரு படமாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.



from விகடன்

Comments