BTS ரசிகர்களுக்கு ஒரு Shock… `கேட்கும் திறன் குறைபாடு' - பாடகர் V பகிர்ந்த தகவல்!

BTS ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்! உலகப் புகழ்பெற்ற K-pop குழுவான BTS-ன் பாடகர் V, தனக்கு ஒரு காதில் கேட்கும் திறன் குறைபாடு இருப்பதாக முதன்முறையாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

V எனும் மேடைப் பெயரால் அறியப்படும் 30 வயதான BTS குழுவின் பாடகர் கிம் தே-ஹ்யுங் (Kim Tae-hyun) சமீபத்தில் நடைபெற்ற Live stream நிகழ்ச்சியில் பேசியபோது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். இதைப் பற்றி தனது ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது இதுவே முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார்.

தனது இடது காதில் கேட்கும் திறன் நன்றாக இருப்பதாகவும், வலது காதில் அதைவிட 30% மிகவும் குறைவாக இருப்பதாகவும் V குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இதை V பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இது வெறும் "மன வலிமை தொடர்பான விஷயம்" என்று நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களைத் தொடர்ந்து சந்தித்து சிகிச்சை பெற்று வருவதுடன், மருந்துகளையும் எடுத்துக்கொண்டு வருவதாக V தெரிவித்துள்ளார்.

அதே Live stream நிகழ்ச்சியில் பேசிய BTS பாடகர் ஜியோன் ஜங்-குக் (Jeon Jung-kook)-கும் தனது காலில் ஏற்பட்ட காயம் குறித்து பேசியுள்ளார்.

சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயம் குறித்து பேசிய அவர், அதை கவனமாக நிர்வகிக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க காயத்தை சரியாகக் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

BTS குழு வரும் மாதங்களில் மேலும் பல நாடுகளுக்கு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.ஒருபுறம் உலகம் முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் BTS-ன் இசைப் பயணம் தொடர்ந்தாலும், V-ன் கேட்கும் திறன் குறித்த இந்தத் தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.



from விகடன்

Comments