'அபிஷன் கதை சொன்ன விதம் Fantastic; அதனால அவரோட ஒரு முழு நீள தமிழ்ப் படம்..!' - சிவராஜ் குமார்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025-ல் 'அபிஷன் ஜீவிந்த்'துக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருதை வழங்கினர் நடிகர் சிவ ராஜ்குமார்.

சிவ ராஜ்குமார் விழா மேடையில், "முதல்ல நான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பார்த்த உடனே ரொம்ப ஹேப்பி ஆனேன். அவரோட இயக்கம் இல்லாம, ஒரு அழகான ரோல் பண்ணியிருக்காரு. அது எனக்கு ரொம்ப டச் ஆச்சு.

அந்தப் படத்தை அவர் எடுத்த விதமும், அந்த டெம்போவை மெயின்டெயின் பண்ணதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவந்த்
சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவந்த்

அப்புறம் நான் பிஸியா இருந்தப்பவும், டைரக்டர் கௌதம் என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் சொன்னாரு. 'அபிஷேக் இதை நீங்கதான் பண்ணணும்னு ஆசைப்படுறார்'னு சொன்னாங்க.

எனக்கு அந்தப் பையனை (அபிஷேக்) ரொம்பப் பிடிக்கும், அவர் கதை சொன்னவிதமும் ஃபென்டாஸ்டிக்.

அதனால நான் பண்றேன்னு சொன்னேன். இது ஒரு முழு நீள தமிழ்ப் படம். அவரோட வொர்க் பண்றது ரொம்ப ஜாலியா இருந்தது. அவர்கிட்ட நிறைய டேலன்ட் இருக்கு.

அவர் டைரக்ட் பண்றவிதம், மத்தவங்களுக்கு மரியாதை கொடுக்குறவிதம் எனக்கு ரொம்பப் பிடிச்சது.

எனக்கு 30 வருஷ சினிமா அனுபவம் இருந்தாலும், அவருக்கு என்ன வேணுமோ, அதை நான் கொடுக்கணும்னு நினைச்சேன். நாளைக்கு அவர் அந்தப் படத்தைப் பார்க்கும்போது திருப்தியா இருக்கணும்" என்று பேசினார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025


from விகடன்

Comments