BB Tamil 9: ``என்ன விட பிரஜின் கிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தாங்க, ஆனா.! - திவ்யா குறித்து சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் திவ்யாவை பற்றி சாண்ட்ரா விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

 BB Tamil 9
BB Tamil 9

என்ன விட பிரஜின் கிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தவங்க திவ்யா தான். பிரஜின் வெளிய போனதை என்னால ஏத்துக்கவே முடியல. அப்போ நான் அழுதிட்டு இருக்கேன்.

பிரஜினோட பெட்டி வந்திருச்சு. சாண்டரா உங்க டிரஸ்லாம் எடுங்க. நான் என்னோட டிரஸ் வைக்கணும் இப்போவே எடுங்கன்னு சொல்றாங்க.

நான் அழுதிட்டு இருக்கும்போது இப்படி சொன்ன எப்படி இருக்கும் விக்ரம்" என சாண்ட்ரா பேசுகிறார்.



from விகடன்

Comments