BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க' - அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்தவகையில் நேற்று(டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருக்கிறார்.

"நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்'னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க.

அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க.

யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, அதை பத்தி எங்க பேசலாம்'னு ரொம்ப தெளிவா இருக்காங்க.

BB Tamil 9
BB Tamil 9

பார்வதியோட விசுவாசம் கேமுக்கு மட்டும்தான். அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க.

இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு விளையாடு" என்று அமித்துக்கு ஸ்ரீரஞ்சனி அட்வைஸ் செய்கிறார்.



from விகடன்

Comments