Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில் ''வரும் 24ம் 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குகிறது'' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டனர். வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் என தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டது.

படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் சமந்தா, இன்னொருவர் ஹோம்லி ஹீரோயின் எனப் பெயரெடுத்தவர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் என்ட்ரி ஆகிவிடுவார் என்கின்றனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தன் எக்ஸ் பக்கத்தில் `மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது' எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வடசென்னை படத்தின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக வந்திருக்கிறது.



from விகடன்

Comments