விமானம் செங்குத்தாக புறப்பட, இறங்க உதவும் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை 

சென்னை: ​வி​மானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்​சி​யாளர்​கள் கண்​டு​பிடித்து சாதனை படைத்​துள்​ளனர்.

பொது​வாக விமானங்​கள் ஓடு​தளத்​தில் குறிப்​பிட்ட தூரம் விரை​வாக ஓடி அதன் பின்​னரே மேலே எழும்​பும். அதே​போல, வானில் இருந்து தரை​யிறங்​கும்​போதும் ஓடு​தளத்​தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்​னரே குறிப்​பிட்ட இடத்தை வந்​தடை​யும். இந்த நிலை​யில், விமானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை (Vertical Take-off & Landing - VTOL) சென்னை ஐஐடி விண்​வெளி பொறி​யியல் துறை பேராசிரியர் பி.ஏ.​ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனத​ரா, ஆராய்ச்​சி​யாளர் அனந்து பத்​ரன் ஆகியோர் கண்​டு​பிடித்​துள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments