``இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கானது!" - `டியூட்', `டீசல்', `பைசன்' படங்களுக்கு வாழ்த்து சொன்ன சிம்பு

வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவும்.

பண்டிகை தினக் கொண்டாட்டங்களுடன், திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டுமென்பதும் பலருடைய விருப்பமாக இருக்கும்.

 `டியூட்' படம்
`டியூட்' படம்

அப்படி இந்தாண்டு தீபாவளி வெளியீடாக மாரி செல்வராஜின் பைசன்', ஹரிஷ் கல்யாணின் டீசல்', பிரதீப் ரங்கநாதனின் `டியூட்' ஆகிய திரைப்படங்களும் திரைக்கு வருகின்றன.

இந்த மூன்று திரைப்படங்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் சிம்பு, ``அன்புள்ள ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கானது.

டீசல்', டியூட்', `பைசன்' என மூன்று திரைப்படங்களும் காதல், நம்பிக்கை மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பிறரோடு ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தமிழ் சினிமாவில் ஒரு பகுதியாக நாம் அவர்களைக் கொண்டாடுவோம்.

வந்தவர்களுக்கும், வந்துகொண்டிருப்பவர்களுக்கும், வரக் காத்திருப்பவர்களுக்கும் உறுதுணையாக நிற்போம். நாம் அனைவரும் இணைந்து சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



from விகடன்

Comments