Balayya: "பாலய்யா பன்ச், POSITIVITY" - சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த பாலய்யா; வாழ்த்திய ரஜினி!

தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலய்யா), தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை பாலகிருஷ்ணாவின் 'Bhagavanth Kesari' திரைப்படம் வென்றது. மத்திய அரசின் பத்ம பூஷன் விருதைப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் பாலய்யாவைப் போல இந்த ஆண்டு சினிமாவில் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ரஜினி, பாலய்யாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பாலய்யா வஸ்தாவய்யா- 14

பாலய்யா வஸ்தாவய்யா தொடர் 1: `மன தேவுடு மல்லி புட்டாடு' - அப்பாவுக்கு தம்பி;அண்ணனுக்கு மகனாக நடித்த பாலய்யா

அந்த வீடியோவில் பாலய்யாவின் வசனங்களை பேசிக்காட்டி, தெலுங்கில் பேசியிருக்கும் ரஜினி, "பாலகிருஷ்ணா பேசும் பன்ச் வசனங்களை அவர் தவிர வேறு யார் பேசினாலும் சிறப்பாக இருக்காது. பாலய்யா என்றாலே POSITIVITYதான், Negativity என்பதே அவரிடம் கொஞ்சம்கூட இருக்காது.

அவர் எங்கு இருந்தாலும், மகிழ்ச்சியும், சிரிப்புமே இருக்கும். அவருக்குப் போட்டி அவர்தான். பாலய்யா படம் நன்றாக ஓடுகிறது என்றால், அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அதுவே அவரது பலம்.

பாலய்யா வஸ்தாவய்யா தொடர் 2: `சூரியனுக்கு முன் உணவு' -MGR பெரியப்பா, சிவாஜி சித்தப்பா - சென்னையில் விருந்து

இப்போது சினிமாத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். இதே POSITIVITYவுடன் சினிமாத்துறையில் பணியாற்றி 75 ஆண்டுகளை நிறைவு செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from விகடன்

Comments