"என் 5 படங்களின் கதையையும் அந்த ஹீரோவிடம்தான் முதலில் சொன்னேன், ஆனால்..!" - 'சூர்யா 46' இயக்குநர்

'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

'லக்கி பாஸ்கர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் 46-வது படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில்தான் தொடங்கியது.

Venky Atluri - Vaathi BTS
Venky Atluri - Vaathi BTS

'சூர்யா 46' திரைப்படம் ஒரு குடும்பக் கதை, அதில் உண்மையான மனித உணர்வுகள் இருக்குமென சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

அதே பேட்டியில் அவர் நாக சைதன்யா குறித்தும் அவருடைய குடும்பம் பற்றியும் பேசியிருக்கிறார்.

நாக சைதன்யா குறித்து அவர், "இதுவரை வெளிவந்த என்னுடைய ஐந்து படங்களின் கதையையும் நான் முதன் முதலில் நாக சைதன்யாவிடம்தான் சொல்லியிருக்கிறேன்.

ஆனால், எந்தப் படங்களும் அவருடன் நடக்கவில்லை. அதற்கு தேதி பிரச்னைகள் மற்றும் இதர விஷயங்கள்தான் காரணம்.

நாக சைதன்யா
நாக சைதன்யா

இப்போது சமீபத்தில்கூட நான் நாக சைதன்யாவைச் சந்தித்துப் பேசினேன். சிரித்துக் கொண்டே 'இந்த முறை நாம் மிஸ் செய்யக் கூடாது. நிச்சயமாக நாம் இணைய வேண்டும்' எனக் கூறினார்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

வெங்கி அட்லூரி நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனியை கதாநாயகனாக வைத்து 'மிஸ்டர் மஞ்சு' என்றப் படத்தை எடுத்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from விகடன்

Comments