பத்ம விருதுகள்: ``தனி முத்திரை பதித்த அன்புச் சகோதரர்கள்.." - புகழ்ந்து வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கும், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பத்ம விருதுகளை வாங்கிய நடிகர் அஜித் குமாரையும், கிரிக்கெட் வீரர் அஷ்வினையும் வாழ்த்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றும்

``கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென தனி முத்திரை பதித்த அன்புச் சகோதரர் திரு.அஷ்வின் அவர்கள், இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்." என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from விகடன்

Comments