Vijay: "விஜய் சார் சொன்ன அந்த வார்த்தை..." - விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

'கோமாளி', 'லவ் டுடே', `டிராகன்' என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து கோலிவுட்டை கலக்கி வருகிறார். இந்நிலையில் 'டிராகன்' படக்குழுவினருக்குப் பலரும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.

டிராகன்

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, 'டிராகன்' படக்குழுவினருடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். 'டிராகன்' படத் தயாரிப்பாளரும், விஜய்யின் 'G.O.A.T' படத் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியும் இவர்களுடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார்.

விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப், " 'கலக்குறீங்க ப்ரோ' தளபதியிடமிருந்து வந்த அந்த வார்த்தை எனக்குள் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். உங்களின் பாராட்டு வார்த்தையும், எங்களுக்காக நீங்கள் ஒதுக்கிய நேரத்திற்கும் நன்றி. 'சச்சின்' பட ரீ-ரிலீஸ்காக காத்திருக்கிறேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, "இது எங்களின் டிராகன் மொமன்ட். எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி சார். வாழ்வின் அர்த்தமுள்ள தருணம் இது" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://ift.tt/8XUW61j

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://ift.tt/8XUW61j



from விகடன்

Comments