SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளியான புகைப்படங்கள்!

`ஆர்.ஆர்.ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் ப்ரியங்கா சோப்ராவும் முக்கியக் கதாபாத்திரத்ததில் நடித்து வருகிறார். ப்ரியங்கா சோப்ரா படத்தில் நடிப்பது இணையத்தில் வெளியான ஒரு புகைப்படம் மூலமாக உறுதியாகியிருக்கிறது.

வரலாற்றை சார்ந்த கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஒடிசா மாநிலம் கோராபுட் பகுதியில் நடைபெற்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒடிசா மாநிலத்தின் துணை முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அந்தப் பதிவில் படத்தில் ப்ரித்விராஜ் நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ப்ரித்விராஜ் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ̀புஷ்பா -2' படப்பிடிப்பை தொடர்ந்து ராஜமெளலி படத்தின் படப்பிடிப்பும் இங்கு நடக்கிறது. ஒடிசா மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு தளங்களுக்கான வளம் இருப்பதாக இந்த விஷயங்கள் காட்டுகிறது. இது ஒடிசா மாநிலத்தின் டூரிசத்திற்கு ஒரு பூஸ்ட்டாக இருக்குமென அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒடிசா மாநிலம் கோராபுட் பகுதியில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறதாம். படக்குழுவினர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் இந்த படப்பிடிப்பு முடிந்தப் பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Rajamouli Letter

மேலும், இந்தப் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்புக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி கூறி ராஜமெளலி எழுதிக் கொடுத்திருக்கும் கடிதம் ஒன்றும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், ̀̀ அன்புள்ள கோராபுட், உங்களின் இந்த சிறப்பான கவனிப்புகளுக்கு மிக்க நன்றி. இன்னும் பல அட்வென்சர்களை நோக்கி நகர்கிறோம். #SSMB29 படத்தின் செட்களிலிருந்து ...." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from விகடன்

Comments