Ravi Mohan: `எது பண்ணாலும்..' -ரசிகர்களுக்கு நடிகர் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்

காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து ரவி மோகன் (ஜெயம் ரவி) ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியாகி  நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "2025 ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிடுச்சி.

ரவி மோகன்
ரவி மோகன்

அல்லது  பறந்துடுச்சினு சொல்லலாம். இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க, சந்தோஷமா பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க. எல்லாரும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பீங்கன்னு நம்புறேன். அதே மாதிரி இந்த வருஷம் எது பண்ணாலும் அன்பு மற்றும் கருணையுடன் பண்ணுங்க” என்று பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from விகடன்

Comments