நெட்ஃபிளிக்ஸில் வெளியான Never Have I Ever தொடர் மூலம் பிரபலமான ஈழத் தமிழ் பெண் மைத்ரேயி ராமகிருஷ்ணன், சமீபத்தில் இந்தியா வந்துள்ளார்.
தன்னுடைய குழந்தைப் பருவ ஃபேவரைட் நடிகையான ஜோதிகாவைச் சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மைத்ரேயியின் பெற்றோர் கனடாவில் குடியேறியவர்கள். இவர், இந்தியாவுக்கு வருவது தனது ஆசைகளுள் ஒன்று என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
Maitreyi Ramakrishnan இன்ஸ்டாகிராம் பதிவு
மைத்ரேயி தனது இன்ஸ்டாவில், "ஐக்கானிக்கான ஜோதிகாவை சந்தித்தேன் (என்னுடைய குழந்தைப் பருவத்தை கட்டமைத்தவர்). இந்தியாவில் பயணம் எல்லா விலங்குகளையும் நண்பர்கள் ஆக்கிவிட்டேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை ஸ்டோரியில் பகிர்ந்து "லெஜண்டைப் பாருங்கள்" என எழுதியிருந்தார். அத்துடன் "❤️❤️" எமோஜிகளையும் சேர்த்திருந்தார்.
ஜோதிகாவின் நடிப்பை பார்த்து வளர்ந்ததையும் விலங்குகள் மீதான அவரது அன்பையும் இந்த பதிவில் வெளிப்படுத்தியவர், சில விலங்குகளின் வீடியோக்களையும் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக ஒரு பேட்டியில் மைத்ரேயி தான் தமிழ் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், 'போக்கிரி', 'சந்திரமுகி' படங்கள் தனது ஃபேவரைட் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், ஜோதிகாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தனக்கு நடிப்பின் மீது ஆசை வர விஜய்யும் ஜோதிகாவும் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.
from விகடன்
Comments