பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். அனுபமா, காயது லோகர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 'டிராகன்’ பட வெளியீட்டிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரதீப் ரங்கநாதன், "ஆரம்பத்திலேயே படத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்ததற்கு நன்றி. இது ஒரு அழகான படம். ஜாலியா என்ஜாய் பண்ணிப் பார்க்கலாம். இதையெல்லாம் தாண்டி இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த எனது நண்பர் அஷ்வத்திற்கு நன்றி.

ஒரு நல்ல மெசேஜ் சொல்லக்கூடிய படத்தில் நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் மூலம் நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கிறோம். அதைத்தாண்டி எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை சப்போர்ட் செய்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
from விகடன்
Comments