Ajithkumar: ஸ்பெயினில் ஏற்பட்ட விபத்து; அஜித்துக்கு என்ன நடந்தது?

கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித் குமார், இன்றைய ரேஸின்போது விபத்தில் சிக்கியுள்ளார்.

கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ரேஸில் 3வது இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தொடர்ந்து இன்று ஸ்பெயினின் வலென்ஸியா நாட்டில் நடைபெறும்  Porsche Sprint Challenge Southern European Series 2025 போட்டியில் களமிறங்கியுள்ளார்.

Ajith Kumar விபத்து

இந்தப் போட்டியின் 5வது சுற்றில் அஜித் குமார் 14வது இடத்தைப் பெற்று பாராட்டுகளைப் பெற்றுள்ளாதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

ஆறாவது சுற்றில் துரதிர்ஷ்டவசமாக இரண்டுமுறை கீழே விழுந்துள்ளார் அஜித் குமார்.

விபத்து அவரது தவறால் நடக்கவில்லை என்றும், வலுவான விடாமுயற்சியால் முதன்முறை விழுந்தபிறகு மீண்டும் களத்தில் இறங்கியதாகவும் சமூக வலைத்தளப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

காயமின்றி வெளியேறிய அஜித் குமார் மீண்டும் பந்தயத்தில் ஈடுபடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

Porsche Sprint Challenge Southern European Series 2025 போட்டியில் அஜித்குமார் இதுவரை ஓட்டியதிலேயே அதிவேகமான சுற்றை நிறைவு செய்துள்ளார். வெறும் 1.38.40 நிமிடங்களில் சுற்றை நிறைவு செய்துள்ளார்.

சுரேஷ் சந்திராவின் பதிவில் ஏ.கே நலமாக இருப்பதாகவும், அவருக்காக அவர் மீது அக்கறையுடன் பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தில் நடிகை த்ரிஷா ரம்யா கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக இன்றறு புரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.



from விகடன்

Comments