What to watch on Theatre: குடும்பஸ்தன்,பாட்டல் ராதா, ஹவுஸ் கீப்பிங் - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

குடும்பஸ்தன் (தமிழ்)

குடும்பஸ்தன் படத்தில்...

நக்கலைட்ஸ் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர், சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குடும்பஸ்தன்'. பேச்சுலராக இருந்து கல்யாண வாழ்க்கையில் நுழையும் மணிகண்டன், குடும்பத்தை நடத்த, புரிந்துகொள்ள என்னமாதிரியான பிரச்னைகளை, சவால்களை எல்லாம் சந்திக்கிறார் என்பதை ஜாலியாகச் சொல்லுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பாட்டல் ராதா (தமிழ்)

பாட்டில் ராதா

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், பாரி இளவழகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது 'பாட்டல் ராதா'. மதுபோதையால் ஏற்படும் குடும்ப- சமூக பிரச்னைகளையும், அதிலிருந்து மீண்டுவரும் சவால்களையும் பற்றி பேசும் இத்திரைப்படம் இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் (தமிழ்)

Mr. HouseKeeping

அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஹரி பாஸ்கர், லாஸ்லியா, இளவரசு, ஷா ரா, உமா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'. முக்கோணக் காதலின் எமோஷனல் ரோலர் கோஸ்டர் திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

வல்லான் (தமிழ்)

வல்லான்

மணி செய்யோன் இயக்கத்தில் சுந்தர் சி, ஹெபா பட்டேல், தான்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வல்லான்'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் (தமிழ்)

குழந்தைகள் முன்னேற்றக் கழகம்

சங்கர் தயால் இயக்கத்தில் யோகி பாபு, செந்தில், சுப்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'. மேயர் தேர்தலை ஒட்டி நடக்கும் ஜாலியான அரசியல் திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Dominic and the Ladies Purse (மலையாளம்)

Dominic and the Ladies Purse

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, கோகுல் சுரேஷ், சுஷ்மிதா, விஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Dominic and the Ladies Purse'. காமெடி, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Anpodu Kanmani (மலையாளம்)

Anpodu Kanmani

லிஜு தாமஸ் இயக்கத்தில் அர்ஜுன் அஷோகன், அனஹா, அல்தஃப், மாலா பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Anpodu Kanmani'. ஃபேமலி, காமெடி திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Thalli Manasu (தெலுங்கு)

Thalli Manasu

ஶ்ரீனிவாஸ் இயக்கத்தில் ரச்சிதா, கமல் காமராஜு, ஆதர்ஷ், சாத்விக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Thalli Manasu'. வாழ்க்கையில் கஷ்டங்களுடன் பல சவால்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்தும் குடும்பம் பெண்ணின் கதையான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Hathya (தெலுங்கு)

Hathya

ஶ்ரீவித்யா இயக்கத்தில் ரவி வர்மா, தன்யா, பூஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Sky Force (இந்தி)

Sky Force

சந்தீப் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வீர் பஹாரியா, சாரா அலிகான், நிம்ரட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Sky Force'. இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த விமானப் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Twilight of the Warriors: Walled In (ஆங்கிலம்)

Twilight of the Warriors: Walled In

போயூ சொய் இயக்கத்தில் லூயிஸ் கோ, சம்மோ, ரிச்சி ஜென், ரேமண்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Flight Risk (தமிழ்)

Flight Risk

மெல் கிஃப்சன் இயக்கத்தில் மார்க் வால்பெர்க், மிச்சல், டாஃபர் கிரேஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன், அட்வன்சர், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜன 24) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இன்டர்ஸ்டெல்லார்

இன்டர்ஸ்டெல்லார்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் மேத்யூ மேக்கானக்கே, அன்னி ஹேத்தவே, கேஸி, மைக்கல் கெய்ன் உள்ளிட்டோர் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஸ்பேஸ் ஆராய்ச்சிப் பற்றிய திரைப்படமான 'இன்டர்ஸ்டெல்லார்' மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகியிருக்கிறது. குறிப்பாக பிரத்தேகமாக ஐ-மேக்ஸ் திரையில் வெளியாகியிருக்கிறது.



from விகடன்

Comments