ஷாருக் கானுக்கு ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகின.
`பதான்', `ஜவான்', `டங்கி' என வெளியான மூன்று படங்களுக் ஹிட்டடித்து வசூலை அள்ளின. இதன் பிறகு, கடந்த 2024-ம் ஆண்டு இவர் நடிப்பில் எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. ஆனால், இவர் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படங்கள் குறித்தான செய்திகள் மட்டும் கிசு கிசு-வாக பேசப்பட்டு வந்தது.
எத்திரைப்படமும் வெளியாகவில்லை என ரசிகர்களிடம் ஏக்கம் இருந்த சமயத்தில் `கொஞ்சம் இருங்க பாய்' மொமன்ட்டைப் போல `முஃபாசா' திரைப்படத்தின் இந்தி மொழி பதிப்பிற்கு டப்பிங் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் அடுத்ததாக `கிங்' என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை பாலிவுட் இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படம் தொடர்பாக துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் ஷாருக் கான். தனது வழக்கமான நகைச்சுவை பாணியிலேயே பேசிய ஷாருக்கான், `` இன்னும் சில மாதங்களில் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. சித்தார்த் ஆனந்த்தான் என்னுடைய இயக்குநர். அவர் மிகவும் கண்டிப்பானவர். இதற்கு முன்பு `பதான்' படத்தை இயக்கியவர். அதனால்தான் அவர் கண்டிப்பானவர். படத்தை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என அவர் சொல்லியிருக்கிறார். அதனால் அதைப் பற்றி வேறு எதையும் சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயம் உறுதி. அத்திரைப்படம் நிச்சயமாக உங்களை என்டர்டெயின் செய்யும். " எனக் கூறியிருக்கிறார்.
இதன் பிறகு அந்த மேடையில் தன்னுடைய பாடல்களுக்கு துள்ளலான நடனமும் ஆடினார் ஷாருக்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
from விகடன்
Comments