பாடலாசிரியர் சினேகனும் நடிகை கன்னிகாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் கடந்த வாரம் இரண்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை மகிழ்ச்சியாக இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் தற்போது பதிவிட்டிருக்கின்றனர். கன்னிகா வெளியிட்டிருந்தப் பதிவில்,
"இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது...

தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் ...
இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...
இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது ...
உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்.
என்றும் அன்புடன்
சினேகன்
கன்னிகா சினேகன் “ என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். பலரும் சினேகன் மற்றும் கன்னிகாவிற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
from விகடன்
Comments