Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' - ரயான் எக்ஸ்க்ளூசிவ்

பிக் பாஸ் சீசன் 8 முடிந்திருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் பீஸ்ட்டாக அதிரடியாக ஆடியவர் ரயான். தன்னுடைய ரெமோ ஸ்டைலால் பல பெண்களின் க்ரஷ் லிஸ்டிலும் தற்போது இடம் பிடித்திருக்கிறார். அவரை சந்தித்துப் பிக் பாஸ் தொடர்பாக பல விஷயங்கள் பேசினோம்.

ரயான், `` பிக் பாஸ் என்னுடைய வாழ்க்கையில ஒரு மைல்ஸ்டோன். இந்த தருணத்துல படமும் வெளியாகியிருக்கு. அனைத்துப் பக்கங்கள்ல இருந்தும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ்தான் கிடைச்சிட்டு இருக்கு. நன்றியைத் தாண்டி என்ன விஷயம் சொல்றதுனு எனக்குத் தெரில (புன்னகைக்கிறார்). எனக்கு வெளிய இருந்து ஊக்கம் கொடுக்கிற மாதிரி ஒரு புஷ் தேவைப்பட்டது. அந்த சமயத்துல என்னுடைய அக்கா வந்து எனக்குப் புரியுற வகையில பல விஷயங்கள் சொன்னது எனக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி இருந்தது. அதன் பிறகுதான் `டிக்கெட் டு பினாலே' நடந்தது. வெளில வந்ததும் `இப்படியான விளையாட்டைதான் உன்கிட்ட எதிர்பார்த்தோம். நாங்க எதாவது தப்பாக சொல்லியிருந்தால் சாரி'னு அக்கா சொன்னாங்க. அவங்க ப்ரீஸ் டாஸ்க்ல சொன்ன சில விஷயங்கள்தான் என்னை ஊக்கப்படுத்துச்சு. `டாஸ்க் பீஸ்ட்'ங்கிற பெயர் என் அக்காதான் சொல்லிட்டுப் போனாங்க. வேற யாரும் அப்படிக் கூப்பிடல. அந்த சமயத்துல அக்கா சொன்ன விஷயத்தை நான் நம்பிட்டேன்.

Rayan Exclusive - BB Tamil 8

வெளில வந்து பார்த்ததுக்குப் பிறகுதான் அக்கா சும்மா சொல்லியிருக்காங்கனு தெரிஞ்சது. " என்றவர், `` முத்துக்குமரன் கேம்முக்குப் போட்ட உழைப்புக்கு கிடைச்சதுதான் வெற்றி. ஒரு நேரத்துல முத்துக்குமரன்கூட 3 மணி நேரம் பேசினேன். அப்போ பர்சனலாக நிறைய விஷயங்கள் பேச ஆரம்பிச்சுட்டோம். முத்துக்குமரன் பேசினதுல எனக்கு மோட்டிவேஷன் கிடைச்சது. கோவா கேங் நட்பு இனிமேலும் கண்டிப்பாக தொடரும். நான் ஜாக்குலின், செளந்தர்யாதான் கோவா கேங் மெம்பர்ஸ். மத்தவங்களும் இருந்தாங்க. ஆனா, ஒரு கட்டத்துல அவங்க பர்சனல் முடிவுல வெளில போயிட்டாங்க.

செளந்தர்யாவோட தனித்துவம் அவங்க அவங்களாகவே இருக்கிறதுதான். அவங்களை மாதிரி யோசிக்க முடியாது. அவங்களை மாதிரி ரியாக்‌ஷனும் கொடுக்க முடியாது. ஜாக்குலின்கூட இருக்கிற மாதிரியான எமோஷனல் பாண்ட் வேற யார்கிட்டையும் இருக்காது. அப்புறம்....ரெமோ கிஸ் முன்னாடி வேற மாதிரிக் கொடுத்துட்டு இருந்தேன். அப்புறம் பரிணாம வளர்ச்சி அடைஞ்சு அது வேற மாதிரி ஆகிடுச்சு. இப்போ எங்கப் போனாலும் என்னை அந்த ஸ்டைல் வச்சு அடையாளப்படுத்துறாங்க." என்றவரிடம் ` லைவ் முடிஞ்சதுக்குப் பிறகு என்னென்ன விஷயங்கள் நிகழ்ந்தது?' எனக் கேட்டதற்கு, ``பவித்ராகூட எப்போதும் பிரச்னைதான் வரும். அவங்க சொல்ற விஷயங்களை நான் கேட்கவே மாட்டேன். அதுனால பிரச்னை வரும். லைவ் முடிஞ்சதுக்குப் பிறகு நாங்க எங்கையும் தனியாகவே போகல.

Rayan Exclusive - BB Tamil 8

எல்லோரும் ஒண்ணாகதான் சுத்திட்டு இருந்தோம். ஒரு கட்டத்துல இரண்டு பெண்கள் மூணு பசங்களுக்கு தொல்லைக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னுடைய முடிக்கும் கலர் அடிக்கும்போது பச்சை கலர் மட்டும் வேண்டாம்னு சொல்லியிருந்தேன். ஆனால், அப்போ பச்சை கலர்தான் வந்திருந்தது. அந்தக் கலர்னால என்னுடைய கேம் மாறப்போறது கிடையாது. என்னுடைய எண்ணங்கள் மாறப்போறது கிடையாது. அதை மனசுல வச்சுட்டு அடுத்தடுத்து நகர தொடங்கிட்டேன். " என்றவரிடம், `` செளந்தர்யாவுக்கும் உங்களுக்குமான நட்பு வெளியில் தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்களே...'' எனக் கேட்டோம். அதற்கு, ``எனக்கும் செளந்தர்யாவுக்கும் ஒரு புரிதல் இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் நல்ல தெளிவு இருக்கிறதுனால எங்களை அந்த கமென்ட்ஸ் பாதிக்காது!' எனக் கூறி முடித்துக் கொண்டார்.



from விகடன்

Comments