இயக்குநர் சுரேஷ் சங்கையா இயற்கை எய்தியிருக்கிறார்.
`ஒரு கிடாயின் கருணை மனு', `சத்ய சோதனை' போன்ற படங்களை இயக்கியவர் சுரேஷ் சங்க்கையா.
கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சங்கையா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இவர் இயக்கியிருந்த `சத்ய சோதனை' திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
`காக்கா முட்டை' படத்தின் இயக்குநரான மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்தான் இவர். வித்தார்த்த் நடிப்பில் வெளியான `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இயக்குநரனாக அறிமுகமானவருக்கு முதல் திரைப்படமே கோலிவுட்டில் நல்ல பெயரை பெற்று தந்தது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
from விகடன்
Comments