Siragadikka aasai : வீட்டை விட்டு வெளியேறும் விஜயா? - போலீஸ் பிடியில் சத்யா?

நேற்றைய எபிசோடில் சத்யாவை கைதுசெய்ய சில போலீஸ் அதிகாரிகள் வருகின்றனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர்கள் இந்த நடவடிக்கை எடுக்கின்றனர். மீனா வீட்டில் அனைவரும் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் சத்யாவை பெரிய திருடன் என்று நினைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

விஜயாவிடம் வாங்கிய அடியால் ஏற்கனவே மனமுடைந்து போன சத்யா, போலீஸில் கைதானால் மானம் போய்விடும் என்று நினைத்து மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார். யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்கு செல்கிறார்.

Siragadikka aasai

அந்த சமயம் பார்த்து முத்து அங்கு வருகிறார். முத்துவுக்கு ஏற்கெனவே சத்யா ஹேண்ட் பேக் திருடிய விஷயம் தெரியும் என்பதும், இத்தனை நாள் சத்யாவை முத்து காட்டி கொடுக்கவில்லை என்பது வீட்டில் அனைவருக்கும் தெரிந்துவிடும். அனைவரும் முத்துவை நினைத்து குற்றவுணர்ச்சி அடைகின்றனர்.

முத்து சத்யாவின் கையை உடைத்தது இதனால் என்பதும் தெரிய வருகிறது. முத்துவிடம் மீனா மன்னிப்புக் கேட்கிறார். ஒருபக்கம் போலீஸ் சத்யாவை கைது செய்ய துடித்து கொண்டிருக்க முத்து அவர்களை சமாளித்து அனுப்புகிறார். 

முத்து போலீஸிடம் ``சத்யா என் அம்மா பையை தான் திருடினான். அவன் தெரியாம செஞ்சிட்டான். இது எங்க குடும்ப பிரச்னை.  அந்த பணத்த என்கிட்ட கொடுத்துட்டான். நான் வேணும்னா எழுதி தர்றேன்” என்று முத்து சொல்கிறார். 

ஆனால் போலீஸ் விடவில்லை, உங்க குடும்ப பிரச்னை என்றாலும் வீடியோ வைரலாகிவிட்டது. எனவே கைது செய்வோம் என்கின்றனர். உன் அம்மாவின் பையை தான் திருடியிருக்கிறார், அதனால் அவர்  கடிதம் எழுதி கொடுத்தால் சத்யாவை விட்டுவிடுவோம் என போலீஸ் சொல்கின்றனர்.

முத்துவும் அம்மாவிடம் கடிதம் வாங்கி தருகிறேன் என்று ஒப்பு கொள்கிறார். போலீஸ் போய்விடுகின்றனர். அப்போது தான் அனைவருக்கும் சத்யா காணவில்லை என்பது தெரிகிறது.  

Siragadikka aasai

சத்யாவை காணவில்லை என அனைவரும் தேடுகின்றனர். சத்யாவோ மாடியில் தற்கொலை செய்து கொள்ள முயர்சி செய்கிறார். முத்து காப்பாற்றி அழைத்து வருகிறார். பின்னர் முத்துவின் நண்பர் செல்வம் வீட்டில் கொண்டு போய் விடுகிறார். சத்யா அவமானத்தில் தலைகுனிந்து நிற்கிறார். காரணம் இதற்கு முன்னர் சிட்டியுடன் சேர்ந்து சத்யா செல்வத்தை அடித்திருக்கிறார். இப்போது செல்வத்தில் வீட்டிலேயே தஞ்சம் அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. தவறு செய்துவிட்டதை எண்ணி சத்யா குற்றவுணர்ச்சி அடைகிறார். 

முத்து மீனாவை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மீனா காரில் போகும் போது முத்துவிடம் மீனா மன்னிப்புக் கேட்கிறார். பின்னர் மீனா வீட்டில் அனைவரின் முன்னிலையிலும் முத்து நடந்ததை சொல்கிறார். சத்யா மீது விஜயா முன்னதாக வீண் பழி போட்ட சம்பவம் அவர் மனதில் ஆழமானக் கோபமாக பதிந்துவிட்டது.

எனவே அது பழிவாங்கும் நோக்கத்தில் சத்யா அப்படி செய்துவிட்டான் என முத்து சொல்ல யாருமே அந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

Siragadikka aasai

கோபமாக இருக்கும் அண்ணாமலையிடம் முத்து பேச வரும்போது நேற்றைய எபிசோட் முடிகிறது. எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில், மீனாவை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஆனால் அண்ணாமலை மீனாவை வெளியே அனுப்ப இங்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்கிறார். ஆனால் விஜயா நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லி மிரட்டுகிறார். 


அடுத்து வரும் எபிசோடுகளில் மீனா வீட்டில் இருப்பாரா? சத்யாவை போலீஸிடம் இருந்து முத்து காப்பாற்றுவாரா? ரோகிணியின் குட்டு வெளியே வருமா என்பதெல்லாம் தெரிய வரும். 



from விகடன்

Comments