நடிகர் கமல்ஹாசனை அவருடைய ரசிகர்கள் `உலகநாயகன்' என அன்போடு அழைத்து வந்தனர்.
ஆனால் தற்போது, `என்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம். கமல், கமல்ஹாசன் அல்லது KH' என அழைத்தால்போதும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இவருக்கு முதல் முதலில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார்தான் `உலகநாயகன்' என்ற பட்டத்தை `தெனாலி' திரைப்படத்தில் கொடுத்தார். இது குறித்து விகடனுக்கு முன்பு அளித்த பேட்டியில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசியிருக்கிறார். அவர், " லோகேஷ் கனகராஜ் `விக்ரம்' படத்துல கமல் சாருக்கு டைட்டில் இன்ட்ரோ போட்டிருக்கார். அவருக்கு முதன் முதல்ல `உலகநாயகன்'னு நான்தான் `தெனாலி' திரைப்படத்துல டைட்டில் போட்டேன். அப்போ அன்னைக்கு அதை அவரை டார்சர் பண்ணி எடுத்தேன். அந்த நேரத்துல அவர் ஆளவந்தான் படத்தினுடைய ஷூட்டிங்ல பிஸியாக இருந்தார். அவர் டைட்டிலெல்லாம் வேண்டாம்னுதான் முதல்ல சொன்னார்.
என்னுடைய ஆத்ம திருப்திக்கு எடுத்துக்குறேன்னு சொல்லிதான் அதை எடுத்துட்டு வந்தேன். அந்த டைட்டில் வீடியோ முதல்ல அவருடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்திலிருந்து தொடங்கும். அப்படியே சென்னை, தமிழ்நாடு, இந்தியா, உலகம்னு அப்படியே கருவிழி மாதிரி காணொளி பண்ணி அதை ரெடி பண்ணினேன்." எனக் கூறியிருக்கிறார்..
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
from விகடன்
Comments