கயல் சீரியலில் நேற்றைய எபிசோடில் கயல், மூர்த்தி, மூர்த்தியின் மனைவி, அனு குட்டி என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். கயல் எழிலுக்கு தானே காஃபி போட்டு கொடுக்க வேண்டும் என தன் அம்மாவிடம் சொல்கிறார். அதன் பின்னர் அனைவரும் கயலை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். எப்போதுமே வேலை வேலை என இருந்தவர் இப்போது குடும்ப பெண்ணாக மாறி இருக்கிறார் என கயலை ரசிக்கின்றனர்.
கயல் எழிலுக்கு காஃபி கொடுக்கிறார். எழில் மெத்தையில் இருந்தபடியே காஃபி குடிக்க, கயல் கடிந்து கொள்கிறார். பல் துலக்காமல் காஃபி குடிக்கக் கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்கிறார். கயலின் தங்கை, அம்மா, மூர்த்தி என அனைவரும் கயலின் கண்டிப்புகள் பற்றி சொல்கின்றனர்.
காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ள வேண்டும், இரவில் போன் பார்க்காமல் சீக்கிரமாக தூங்க வேண்டும், பல் துலக்கிவிட்டு குளித்துவிட்டு தான் சாப்பிட வேண்டும், பீஸ்ஸா பர்கர் போன்ற துரித உணவுகள் சாப்பிடக் கூடாது , கடுமையாக உழைக்க வேண்டும் என கயல் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும், வீட்டில் இருக்கும் அனைவரும் கயலுக்கு பயந்து இதையெல்லாம் பின்பற்றுவோம் என்கின்றனர். எழில் உடனே அச்சச்சோ இவ்ளோ ஸ்ட்ரிக்டா, கயல் பால்வாடி டீச்சரா என்று கலாய்க்க அந்த இடமே கலகலப்பாகிறது.
அதன் பின்னர் கயல் தன் அறைக்கு சென்று கண் கலங்குகிறார். எழில் என்ன என்று கேட்க, இன்று இங்கிருந்து சென்ற பின், என் அறையை, என் வீட்டை மிகவும் மிஸ் செய்வேன் என்று அழுகிறார். எழில் கயலை சமாதானப்படுத்த நாம எல்லாம் ஒண்ணா இருக்கலாம், நாம இங்கயே இருக்கலாம் என்று சொல்ல, கயல் மறுக்கிறார், `எது எது எந்ததெந்த இடத்தில் இருக்கணுமோ அந்த இடத்தில் இருந்தால் தான் அழகு’ என்கிறார்.
கயலும் எழிலும் விட்டிற்கு கிளம்ப ஆனந்தி அழுகிறார். கயலின் தம்பியும் அழுகிறார். கயல் ஒவ்வொருவரிடமும் சொன்ன அட்வைஸ் சிறப்பாக இருந்தது. தங்கையிடம் அதிகமா செல்போன் பார்க்கக் கூடாது, நேரத்துக்கு சாப்பிடணும், தூங்கணும், படிக்கணும் என்கிறார்.
தன் அண்ணியிடம் வீட்டில் இருக்கும் அனைவரையும் நீங்க பார்த்துப்பீங்கன்னு தெரியும் , ஆனா உங்கள நீங்க முதல்ல பார்த்துக்கணும் என்று சொல்கிறார் கயல், மூர்த்தியின் பிஸ்னஸ் வெற்றி பெறும் என வாழ்த்துகிறார். அம்மாவிடம், காலம் முழுக்க உனக்கு நன்றி சொல்லணும் என்று நெகிழ்கிறார். ஆக மொத்தம் ஒரு நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது.
திருமணமான பெண்கள் பிறந்த வீட்டை விட்டு பிரியும் போது கண்ணீரும், கவலையுமாக இருக்கும் என பார்த்திருப்போம். ஆனால் கயல் தைரியமான பெண்ணாக தன் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் தனித்தனியாக அட்வைஸ் செய்து விட்டு கிளம்புகிறார். அடுத்து வரும் எபிசோடுகளில் கயலின் மாமியார் சங்கரி அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க சதி செய்வார்.
மற்றொரு புறம் கயல் சீரியல் சீக்கிரமே முடியப் போகிறது என்னும் பேச்சும் எழுந்துள்ளது. புதிதாக நான்கு சீரியல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கயல், சுந்தரி உள்ளிட்ட சில சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
from விகடன்
Comments