கனா காணும் காலங்கள் வெப் சீரிஸின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் சுரேந்தர். `சைக்கோ' ஆதி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பலரையும் ஈர்த்தவர். சீசன் 1, சீசன் 2 என இந்த சீரிஸின் இரண்டு பாகங்களிலும் இவர் நடித்திருந்தார். தவிர, சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். பல இடங்களுக்குப் பயணித்து டிராவல் Vlog செய்வது இவரது வழக்கம். அப்படி வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு சுரேந்தர் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார்.

விபத்தில் அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ செலவுக்காக 50,000 ரூபாய் தேவைப்படுவதால் அந்தப் பணத்தை அவருடைய நண்பர்கள் பலரும் கலெக்ட் செய்து கொடுத்திருக்கிறார்கள். நண்பர்கள், அவருடைய ரசிகர்கள் எனப் பலர் அவருடைய மருத்துவ செலவுக்கு உதவியிருந்த நிலையில் தற்போது வாலஜாபாத்திலுள்ள மருத்துவமனையில் சுரேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சுரேந்தர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், `உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் சீக்கிரம் மீண்டு வருவேன் என நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மீண்டு வாருங்கள் சுரேந்தர்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras

from விகடன்
Comments