‘நாம காத்திருந்த நாள்..!’ ‘பொன்னி’ நாயகி வைஷ்ணவியை கரம் பிடித்த ‘சிறகடிக்க ஆசை’ நாயகன் வெற்றி

யூடியூபராக அறியப்பட்டவர் வெற்றி வசந்த். ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

முதல் தொடரிலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் வைஷ்ணவி. தற்போது ‘பொன்னி’ தொடரின் மூலம் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருவீட்டுப் பெரியவர்கள் சம்மதத்துடன் சமீபத்தில் இவர்களுடைய திருமணம் நிச்சயதார்த்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

வெற்றி வசந்த் - வைஷ்ணவி

ஆல்யா - சஞ்சீவ், ஸ்ரேயா - சித்து என நீண்ட இந்த சின்னத்திரை ஜோடி வரிசையில் வெற்றி - வைஷ்ணவியும் இடம்பிடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று சென்னையில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’, ‘பொன்னி’ தொடர் நடிகர்கள் உட்பட சின்னத்திரை பிரபலங்கள் பலர் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். வெற்றி வசந்த் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ வாழ்த்துகள் டு மை பொண்டாட்டி. நாம் காத்திருந்த நாள் வந்துவிட்டது. லவ் யூ மா!’ என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார்.



from விகடன்

Comments