Bigg Boss Tamil 8: `அருண், நண்பர் என்ற முறையில் ஆதரிக்கிறேன்; நானும் மனிஷி தான்’ - அர்ச்சனா உருக்கம்
பிக் பாஸ்-7 டைட்டில் வின்னர் அர்ச்சனா. வைல்ட் கார்ட் எண்டிரியில் உள்ளே சென்று டைட்டில் வென்ற முதல் பிக்பாஸ் போட்டியாளர் என்றப் பெருமை அவருக்கு உண்டு. விஜே-வாக கரியரைத் தொடங்கியவர், சமீபத்தில் வெளியான டிமாண்டி காலனி 2-வில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழ்பெற்றவரும், தற்போது பிக் பாஸ்-8 சீசனில் கலந்து விளையாடி வரும் அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது.
அதற்கேற்றார்போல, அர்ச்சனாவின் பிறந்தநாளுக்கு அருண் பிரசாத் பிக்பாஸ் வீட்டிலிருந்து வாழ்த்தியதும், அதற்கு அர்ச்சனாவின் ரியாக்ஷனும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையில், சமீபமாக பிக்பாஸ் வீட்டில் அருண் பிரசாத்தின் சில செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. அதற்கு பலரும் அர்ச்சனாவையும் சேர்த்து விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், அர்ச்சனா தன் எக்ஸ் பக்கத்தில், ``இப்போது நான் இருக்கும் இந்த நிலையை அடைவதற்கு கடுமையாக போராடியிருக்கிறேன். எண்ணற்ற சவால்கள், விமர்சனங்கள், தியாகங்களை எதிர்க்கொண்டுதான் வந்திருக்கிறேன். ஆனால், என் கடின உழைப்புகள் அனைத்தும் கவனிக்கப்படாமல், என் பெயரை அனைத்து விமர்சனத்துக்கும் கொண்டுசெல்வது பெரும் வேதனையைத் தருகிறது. அருண் பிரசாத்தும் நானும் வேறு வேறு விருப்பங்களைக் கொண்ட இரண்டு மனிதர்கள். நண்பர் என்ற முறையில் அவரை ஆதரிக்கிறேன்.
ஆனால், அவர் செய்யும் செயலுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? இந்த இடத்தை அடைவதற்கு நான் கடந்து வந்தப் போராட்டத்தை மக்கள் மறந்துவிட்டது என் இதயத்தை காயப்படுத்துகிறது. நீங்கள் எனக்கு காண்பித்த அன்பையும், ஆதரவையும் எப்போதும் மதிக்கிறேன். அதேநேரம் எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் என்னையும் சேர்த்து விமர்சிப்பதை விரும்பவில்லை. அப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாம் என மனதார கேட்டுக்கொள்கிறேன்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரும் அவரின் தனிப்பட்ட விளையாட்டில் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நான் பிக் பாஸ் வீட்டில் இல்லை. இங்கு உங்களோடுதான் இருக்கிறேன். நானும் மனுஷிதான். உங்களின் விமர்சனங்கள் வார்த்தைகளால் சொல்லமுடியாதளவு வலிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook

from விகடன்
Comments