Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது விஜய் சேதுபதிதான்!' - ப்ரியா ராமன் ஓப்பன் டாக்

`ஸ்கூல் - ஸ்டுடண்ட்ஸ் - ஸ்டாஃப்' என பிக் பாஸ் வீடு அதிரடி கலவரமாக போய்க் கொண்டிருக்கிறது.

ரஞ்சித்தும் தற்போது தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார். மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித்தின் மனநிலையை புரிந்துகொண்டனர். கடந்த வாரம் கதை சொல்லும் ஒரு டாஸ்கில் தனது மூத்த மகன் ஆதித்யா ஆட்டிசமில் பாதிக்கப்பட்டிருப்பதை கூறியிருந்தார். இந்த கதை அவர்மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கிறது. இது தொடர்பாகவும் பிக் பாஸ் வீட்டின் நடப்பு நிகழ்வுகள் குறித்தும் ரஞ்சித்தின் மனைவி ப்ரியா ராமனை சந்தித்தோம்.

தனது மகன் அதித்யா தொடர்பாக பேசிய அவர், "ஆட்டிசம்ல பாதிக்கப்பட்ட குழந்தைகளெல்லாம் இப்படிதான் இருப்பாங்கனு ஒரு பார்வை இருக்கு. அவங்க மீதான இந்த பார்வை எப்படி வந்ததுனு தெரில. சொல்லப்போனால், பாசத்துக்காகதான் அந்த குழந்தைகள் ரொம்பவே ஏங்குவாங்க. ஏதோவொரு தருணத்துல அந்த குழந்தைகளெல்லாம் நாம மற்றவர்கள் மாதிரி இல்லைனு உணர்ந்துகிறாங்க. அந்த விஷயம் அந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்குது. அவங்க அந்த நேரத்துல தன்னம்பிக்கை இழந்துடுவாங்க. இந்த கொடூரமான சமூகம் அவங்களை கேலி பண்றாங்க. என்கிட்டையும் பலர் வந்து `ஏன் உங்களுடைய குழந்தைகளை வெளியில காட்டமாட்டேங்குறீங்க'னு கேட்டாங்க.

Priya Raman

அப்போ அவங்ககிட்ட நான் `இந்த சமுதாயம் எப்படி இருக்குனு பார்த்துட்டுதானே இருக்கீங்க. நான் ஏன் அவனை வெளியில காட்டணும். சில பேர் புரிஞ்சுகாமல் கிண்டல் பண்ணுவாங்க. சிலர் பாவம்னு நினைப்பாங்க. அந்த விஷயம் எனக்கும் வேண்டாம் ஆதித்யாவுக்கும் வேண்டாம். ஆதித்யா ரொம்ப சந்தோஷமாக இருக்கான். இப்போ ரஞ்சித்தும் ஆதித்யாவை மிஸ் பண்ணுவாரு. ஆதித்யாவும் அப்பாவை மிஸ் பண்றான். ரஞ்சித் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகுறதுக்கு முன்னாடி ஆதித்யாகிட்ட வீடியோ கால்ல பேசுற மாதிரி காணொளி பதிவு பண்ணிக் கொடுத்திட்டு போனார். ஆதித்யா ரஞ்சித்தை மிஸ் பண்ணும்போது வீடியோ கால் பேசுற மாதிரி நான் அந்த காணொளியை போட்டு காட்டுவேன்.

ஒரு சமயத்துல எங்களுடைய திட்டங்களை அவனும் கண்டுப்பிடிச்சிட்டான். நம்ம ரஞ்சித்தும் ஒரே வீட்டுக்குள்ளேயே வீடியோ ரெக்கார்ட் பண்ணினார். அது வெறும் காணொளிதான்னு அவன் கண்டிப்பிடிச்சு சிரிச்சான். முக்கியமாக ரஞ்சித்துக்கு பொறுமை அதிகமாக இருக்கும். அதித்யாவையும் இரண்டாவது மகனான ஆகாஷை கையாளும் விதத்திலேயே தெரியும். அவர் எப்போது என்கிட்ட எனக்கு மொத்தமாக மூணு குழந்தைகள் இருக்காங்க. அதுல முதல் குழந்தை நான்தான்னு அவர் சொல்வார்.

Priya Raman

நான் எல்லா விஷயங்களை ரொம்ப வேகமாக செஞ்சு முடிக்கணும்னு நினைப்பேன். ஆனா, அவர் மெதுவாக ஒரு விஷயத்தை பண்ணினாலும் அதுக்காக நூறு சதவீதம் உழைப்பை கொடுத்திடுவார். எனக்கு ரெண்டு பேருக்கு இடையில பரஸ்பரம் நல்ல புரிதல் இருக்கும்." என்றார்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்துக் கொண்டிருக்கும் நடப்பு நிகழ்வுகளை வைத்து பேச தொடங்கிய ப்ரியா ராமன், " இப்போ சமீபத்துல ரஞ்சித் ஜெஃப்ரி மாதிரி நடிச்சார். அசலாக அப்படிய் ஜெஃப்ரி மாதிரியே நடிச்சிருந்தார். இந்த உடம்புக்குள்ள ஜெஃப்ரி வந்தால் எப்படி இருக்கும்னு உள்வாங்கி அத்தனை விஷயங்களை ரஞ்சித் பண்ணினார். ரஞ்சித் ரொம்பவே உயரமான மனிதர். ஆனா, ஜெஃப்ரி மாதிரியே முழுவதுமாக மாறி பண்ணினது ஆச்சரியமாக இருந்தது. செளந்தர்யாவாக ஆனந்தி நடிச்சிருந்தாங்க.

Priya Raman

செளந்தர்யாவும் ஜெஃப்ரியும் பண்ணுகிற விஷயங்களை இவங்க ரெண்டு பேரு பண்ணீட்டு இருந்தாங்க." என்றவர், " சொல்லப்போனால் இப்போ ரொம்ப சேஃப் கேம் விஜய் சேதுபதிதான் விளையாடுறாரு. கடந்த வாரம் மொட்ட கடுதாசி யாருக்கு வேணும்னு கருத்துகள் கேட்டுட்டு இருந்தார். அவருக்குதான் மொட்ட கடுதாசி தேவைப்படுது. உண்மை அதுதான். அவர்தான் பெண்கள் அணிக்கு மொட்ட கடுதாசி போடுற மாதிரிதான் பண்றாரு. நான் அவரை ரசிக்கவும் செய்திருக்கிறேன். ஆனால், சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிதானே ஆகணும்." என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal



from விகடன்

Comments