Lokesh Kanagaraj: `LCU உருவானது பற்றி 10 நிமிட குறும்படம் - லோகேஷ் கொடுத்த அப்டேட்!

லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.

இன்று அவருக்கு மிகப்பெரிய பிராண்டாக உருவாகியுள்ள `எல்.சி.யு' என்பதற்கு தொடக்கப்புள்ளி `கைதி' திரைப்படம்தான். அத்திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் `எல்.சி.யு' ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் லோகேஷ்.

`லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' எனப்படும் `எல்.சி.யு' எப்படி உருவானது என்பது தொடர்பாக ஒரு குறும்படம் எடுத்திருப்பதாக அவர் வழங்கிய `ஃபைட் கிளப்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நேரத்தில் கூறியிருந்தார். அதன் பிறகு அந்த குறும்படம் தொடர்பாக எந்த சத்தமும் வெளிவரவில்லை. தற்போது அந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் லோகேஷ்.

LCU Short Film

10 நிமிட கால அளவிலான இந்த குறும்படம் `எல்.சி.யு'-வின் முன்னுரை குறித்து எடுத்துரைக்குமாம். இந்த குறும்படத்திற்கு `சாப்டர் ஜிரோ (Chapter Zero )' என பெயரிட்டிருக்கிறார்கள். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் கதாபாத்திரங்கள் உருவானது குறித்தும், அதன் மேல் எழுந்த சந்தேகங்களுக்கெல்லாம் இந்த குறும்படம் விளக்கமளிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from விகடன்

Comments