What to watch on Theatre & OTT: நந்தன், லப்பர் பந்து, கடைசி உலகப்போர் - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
நந்தன் (தமிழ்)
சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நந்தன்'. ஊரில் அரசியல் தலைவரிடம் வேலையாளாக, அடிமையாகபோல இருக்கும் சசிகுமார், திடீரென அறிவிக்கப்பட்ட தனித்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இந்த அரசியல் பாதையில் சசிகுமார் அதிகாரத்தை அடைந்தாரா அல்லது அழிவை அடைந்தாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
லப்பர் பந்து (தமிழ்)
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டகத்தி தினேஷ், சிறந்த ஆட்டகாராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞரான ஹரிஷ் கல்யாண் இருவருக்குமிடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்குச் சரி நின்று தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. இதற்கிடையில் அட்டகத்தி தினேஷின் மகளையே, ஹரிஷ் கல்யாண் காதிலிப்பது என காதலும் - கிரிக்கெட்டும் கலந்து இரண்டு ஃபிளேவர்களில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கடைசி உலகப்போர் (தமிழ்)
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் திரைப்படம் 'கடைசி உலகப் போர்'. நாசர், நட்டி, அனஹா, அழகன் பெருமாள், முனிஷ் காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். போர், ஆக்ஷன், காதல், கருத்து என உருவாகியிருக்கும் இத்திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கோழிப்பண்ணை செல்லத்துரை (தமிழ்)
'தென்மேற்குப் பருவக் காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'மாமனிதன்' திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், பிரிகிடா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. மனதை வருடும் கிராமத்துக் கதைகளத்தைக் கொண்ட இத்திரைப்படம் நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
தோனிமா (தமிழ்)
ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் காளிவெங்கட், ரோஷினி பிரகாஷ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தோனிமா'. வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண், மதுப் பழக்கத்தால் குடும்பத்திற்குப் பிரச்னைகளைக் கொடுக்கும் கணவன், செல்லமான குழந்தை மற்றும் இந்தக் குடும்பத்தில் புதியாக சேர்ந்து கொள்ளும் செல்ல நாய் என விளிம்பு நிலையில் குடும்பத்தின் சோகம், பிரச்னைகள், மகிழ்ச்சி உள்ளிட்டவற்றைப் பேசும் இத்திரைப்படம் நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
தோழர் சேகுவரா (தமிழ்)
அலெக்ஸ் இயக்கத்தில் சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தோழர் சேகுவரா'. படித்த இளைஞர் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய அரசியல் திரில்லர் திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
சட்டம் என் கையில் (தமிழ்)
சாச்சி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள படம் `சட்டம் என் கையில்’. திரில்லர் திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Hide N Seek (தெலுங்கு)
பாசி ரெட்டி இயக்கத்தில் விஷ்வந்த், ஷில்பா, விவா ராகவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Hide N Seek'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Yudhra (இந்தி)
ரவி உட்யவர் இயக்கத்தில் சித்தார்த் சதுர்வேதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் `Yudhra’. அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Kahan Shuru Kahan Khatam (இந்தி)
சௌரப் தேஷ்குப்தா இயக்கியுள்ள திரைப்படம் `Kahan Shuru Kahan Khatam'. த்வானி, ஆஷிம் குலாட்டி, சுப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி, ரொமான்டிக் இத்திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Never Let Go (ஆங்கிலம்)
அலெக்சன்டி அஜா இயக்கத்தில் ஹெல்லி பெர்ரி, மேத்யூவ் கெவின் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'Never Let Go'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Transformers One (ஆங்கிலம், இந்தி)
ஜோஷ் கூலே இயக்கத்தில் கிரிஷ் ஹேம்ஸ்வொர்த், ப்ரைன், ஸ்கேர்லெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Transformers One'. சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான இது நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
High on Kadhal (தமிழ்) - Aha
அருண் வரதன் இயக்கியுள்ள சீரிஸ் `High on Kadhal’. விஜய் - நக்ஷத்ரா ஆகியோர் நடித்துள்ள காதல் கதைக் கொண்ட வெப்சீரிஸான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
தலைவெட்டியான் பாளையம் (தமிழ்) - Amazon Prime Video
நாகா இயக்கத்தில் அபிஷேக், தேவதர்ஷினி, சேத்தன் நடித்துள்ள வெப்சீரிஸ் `தலைவெட்டியான் பாளையம்’. இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'Panchayat' சீரிஸின் தமிழ் ரீமேக் இது. கிராம பஞ்சாயத்துக்கு செகரட்ரியாக வரும் இளைஞர் சந்திக்கும் சவால்களும், கிராமத்தில் நடக்கும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் மையப்படுத்தியிருக்கும் இந்த வெப்சீரிஸ் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
The Mystery of Moksha Island (தெலுங்கு) - Disney + Hotstar
அனிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் `The Mystery of Moksha Island'. தீவு ஒன்றிற்கு பலரும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு சென்ற பின் நடக்கும் சம்பவங்களே கதை. இந்த வெப்சீரிஸ் 'Disney + Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
The Penguin (ஆங்கிலம்) - Jio Cinema
Craig Zobel இயக்கியுள்ள வெப்சீரிஸ் `The Penguin'. 2022-ல் வெளியான 'தி பேட்மேன்' படத்தில் வரும் பென்குயின் கதாபாத்திரம் கோத்தம் நகரின் க்ரைம் உலகத்தைக் கைப்பற்றுவதே இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் 'Jio Cinema' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
தியேட்டர் டு ஓடிடி
பேச்சி (தமிழ்) - Aha
ராமச்சந்திரன் இயக்கத்தில் காயத்ரி, பால சரவணண், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேச்சி'. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதுதவிர தியேட்டர் டு ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் இவை...
சாலா (தமிழ்) - Aha
Coffee (தமிழ்) - Aha
Jaladhara Pumpset Since 1962 (Malayalam) Jio Cinema
CID Ramachandran Retd SI (Malayalam) manorama MAX
Tiragabadara Saami (Telugu) Aha -
Maruthi Nagar Subramanyam (Telugu) Aha -
Anandapuram Diaries (Malayalam) manorama MAX
Ruslaan (Hindi) Jio Cinema
American Society of Magical Negros (English) - Jio Cinema
from விகடன்
Comments