Siragadikka Aasai : மீனா சொன்னது சரி என உணரும் விஜயா; அடுத்து என்ன நடக்கும்?

கொலு வைக்க வேண்டுமென்ற ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் மீனா. ஆரம்பத்தில் நோ சொன்ன விஜயா, அண்ணாமலை சொன்னதைக் கேட்டு ஒப்புக்கொள்கிறார்.

பார்வதியும் கொலு வைப்பது நல்ல விஷயமென விஜயாவுக்கு எடுத்துக் கூறுகிறார். அப்போது, விஜயாவுக்கு சாப்பாடு கொடுக்க வந்த மீனா, அறையினுள் நடனம் பயிலும் காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துவிடுகிறார். 
இந்த விஷயத்தை விஜயாவிடம் சொல்வதற்கு முன்பே, காதல் ஜோடிகள் மீனா தப்பாக எங்களை நினைத்துவிட்டதாகவும், எங்களைத் திட்டியதாகவும் போட்டுக் கொடுக்கிறார்கள். வழக்கம்போல, மீனாவைத் திட்டி அனுப்பிவிடுகிறார் விஜயா. 

Siragadikka aasai

முத்துவும், மீனாவும் கொலு பொம்மைகளை பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது, வந்து பேசும் மனோஜை, மூக்கை உடைக்கும் விதமாக பேசிவிடுகிறார் முத்து. அறையினுள் சென்று விடும் மனோஜூம் ரோகினியும் கொலு நிகழ்ச்சி பற்றிப் பேசிக் கொண்டனர். அப்போது, ஒன்பது நாட்களுக்கு ஒன்பது ட்ரெஸ் வாங்க வேண்டுமென கூறுகிறார் ரோகினி. அதனால் ஷாப்பிங் போகலாம் என்று மனோஜைக் கேட்கிறார். அப்போது, கொலு வைப்பதற்கு 5000 ரூபாய் கேட்கிறார் முத்து. மனோஜ் தர மறுக்கும் போது ரோகினி தர சம்மதிக்கிறார்.

முதலாளியின் மகளுடன் பேசுவதை ஸ்ருதியின் அம்மா ஏற்கெனவே போட்டுக் கொடுத்திருப்பதால் கடுப்பில் இருக்கும் ஸ்ருதி, ரவியிடம் சண்டைப் பிடித்துக் கொண்டிருப்பார். அப்போது, இவர்களின் அறைக்குள் வருகிறார்கள் முத்துவும் மீனாவும். இவர்களும் கொலுவிற்கு பணம் தர சம்மதிப்பார்கள். ரவியிடம் கோவத்தில் இருப்பதால் என்னுடைய பங்கு என 2500 எடுத்துக் கொடுப்பார் ஸ்ருதி. இவங்க தான் சரியான ஜோடி என புகழ்ந்துதள்ளுவார் முத்து. அதைத்தொடர்ந்து, கொலு பொம்மைகளை எந்த வரிசையில் அடுக்க வேண்டுமென்ற முறையை மீனா சொல்ல ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருப்பார் ஸ்ருதி.

Siragadikka aasai

கொலு எப்படி வைக்க வேண்டுமென்று மீனா சொல்வதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. நாம் செய்யும் வேலை நமக்கு என்ன திறமை இருக்குனு சொல்லிடும் என்று ஸ்ருதியும் முத்துவும் மீனாவைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அண்ணாமலையும் விஜயாவும் ஹாலுக்கு வருகிறார்கள். உடனடியாக, மீனாவும் ஸ்ருதியும் சண்டைப் போடுவது போல பேச ஆரம்பிக்கிறார்கள். அப்போது மீனா கொலு பொம்மையைக் கையில் எடுக்கிறார். இந்த பொம்மையில் இருப்பது போல  சிறுங்கார ரசம் போஸில் தான், அந்த காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்திருந்ததாகவும், இதைச் சொன்னதற்கு தான் விஜயாவிடம் திட்டு வாங்கியதாகவும் முத்துவிடம் கூறுகிறார் மீனா. 

மீனாவுக்கு கலையை ரசிக்க தெரியவில்லை என்று மனோஜ், ரோகினியும் விஜயாவுடன் சேர்ந்துகொள்கிறார்கள். உடனே, இந்த சிறுங்காரரசம் போஸ் போல நீங்க செய்து காட்டுங்க என்று முத்து கூறுகிறார். சிறுங்கார ரசம் என்பது வேறு, அந்த காதல் ஜோடிகள் நெஜத்திலும் நெருக்கமாக இருந்ததாக முத்து கூறுகிறார். இருந்தாலும், விஜயா தன்னுடைய ஸ்டூடண்டுகளை விட்டுக் கொடுக்கவில்லை.

மனோஜின் கடைக்கு வரும் கஸ்டமர் பல லட்ச ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, லாட்டரி விழுந்ததும் வாங்குவதாக கூறுகிறார். இதனால் செம டென்ஷன் அகிவிடுகிறார் மனோஜ். அப்போது, வரும் நபர் உங்களுக்கு லெட்டர் கொடுக்கும் நபர் இந்த இடத்துக்கு வர சொல்லியிருக்கிறார் என முகவரியை கூறுகிறார். மனோஜூம் அங்கு போகலாம் என ரோகிணியிடம் கூறுகிறார். இதனால், ரோகிணி பதட்டமாகிவிடுகிறார். பிஏ பண்ணுற வேலை என ரோகிணி பதறுகிறார்.

Siragadikka aasai

அடுத்ததாக, விஜயா டான்ஸ் கிளாஸில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது காதல் ஜோடிகள் கண்களால் பார்ப்பதும், உரசிக்கொள்வதையும் பார்வதியும் விஜயாவும் கவனித்துவிடுகிறார்கள். இதனால் விஜயா ஷாக் ஆக, அடுத்து என்ன நடக்கப் போகிறதென்ற ட்விஸ்ட்டுடன் எபிசோட் முடிந்தது. மீனா சொன்னது உண்மை தன என்பது விஜயாவுக்கு புரிய வரும்.



from விகடன்

Comments