Siragadikka aasai & Kayal: பாதி கடலை தாண்டிய கயல் சீரியல் | பவுன்சரை துவம்சம் செய்த முத்து?

நேற்றைய எபிசோடில் விஜயாவின் நாட்டிய பள்ளியில் காதலர்கள் தொடர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். விஜயா நாட்டியம் சொல்லிக் கொடுக்கும் போது அதை கவனிக்கிறார்.

மீனா சொன்னது உண்மை என்பது விஜயாவுக்கு ஒரு வழியாக புரிந்துவிட்டது. இத்தனை நாள் இதுதான் நடந்து கொண்டிருக்கிறதா என்பதை சுதாரித்து கொண்டு அவர்களை தனித்தனியாக நிற்க வைக்கிறார். இனி இருவரும் பக்கத்தில் நின்று ஆடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார்.  
மனோஜ் - ரோகிணி கோவிலில் ஒரு சாமியாரை சந்திக்கின்றனர். அந்த சாமியார் வேறு யாருமில்லை, ரோகிணியை பணம் கேட்டு மிரட்டி வரும் அந்த நபர் தான். 

Siragadikka aasai

அவர் சாமியார் வேடமிட்டு மனோஜிடம் பேசுகிறார். ரோகிணி பயத்தில் ஷாக் ஆகி நிற்கிறார். ஆனால் அந்த சாமியார் பிரச்னையை முத்து பக்கம் திருப்பி விடுவது போன்று பேசுகிறார். ரஜினி படத்தின் பெயரை வைத்திருக்கும் ஒருவர் தான் உனக்கு மொட்டை கடுதாசி அனுப்புகிறார் என்று சொல்ல மனோஜ் தனக்கு கடிதம் அனுப்புவது முத்து என்று தவறாக புரிந்து கொள்கிறார். 

வீட்டுக்கு வந்து விஜயாவிடம் சொல்லி முத்து - மீனாவுக்கு எதிராக பேசுகிறார். கூடவே முத்து தன்னை எதாவது செய்து விடுவார் என்று  பயந்து பவுன்சரையும் அழைத்து வருகிறார்.

siragadikka aasai
Siragadikka aasai

நேற்றைய எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் முத்து மனோஜை துரத்தி துரத்தி அடிக்கிறார். மொட்டை கடிதம் எழுதியதாக என் மீது வீண் பழி போடுகிறாயா என்று கேட்கிறார். ப்ரோமோவில் ஒரு காட்சியில் மீனா, ரவி, ஸ்ருதி சிரிப்பது போன்று உள்ளது. எனவே முத்து அந்த பவுன்சரை அடித்து துரத்தி இருக்க வேண்டும். அப்படி நடந்தால் அடுத்த எபிசோட் கலகலப்பாக இருக்கும்.

கயல் : திருமணம் நடக்குமா?


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் முக்கியமான தருணம் வரப்போகிறது. பல நூறு எபிசோடுகளாக ரசிகர்கள் இந்த ஒரு காட்சிக்காக தான் காத்திருக்கின்றனர். எழில் - கயல் திருமணத்தை நிறுத்த பல சதிவேலைகள் நடந்தாலும், ஒவ்வொன்றாக பொறுமையாக டீல் செய்கிறார் கயல். தற்போது திருமண வரவேற்புக்காக மணமேடை வரை வந்து விட்டார்.

kayal
Kayal serial

இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எழிலை கல்யாணம் செய்து கொள்ள  தீபிகா நினைக்கிறார். அதற்காக கயலை கொல்ல அவரின் ஆடையில் ரசாயனம் கலந்த பவுடரை தடவுகிறார். இதுபோன்று ஒரு டெக்னிக் திரைப்படங்களில் கூட இதுவரை நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இந்த விஷயம் கயல் தங்கை ஆனந்திக்கு தெரியவர, கயலிடம் சொல்லி, உன் ஸ்டைலில் பதிலடி கொடு என்கிறார். 

கயல் மேடையில் இருந்து இறங்கி சென்று தீபிகாவிடம் கேட்க, ஒரு கட்டத்தில் தீபிகா திமிராக பேச, கயல் தீபிகா கன்னத்தில் அறைவிடுகிறார். எழிலின் அம்மா சப்போர்ட்டுக்கு வர்ற அவரையும் மிரட்டி அனுப்புகிறார் கயல். ஒருவழியாக தீபிகாவின் பிரச்னை முடிந்து விட்டது.

kayal, sun tv
Kayal serial

ரிசப்ஷனில் கயலின் குடும்பத்தினர் அனைவரும் அவரை பாராட்டி புகழ்கின்றனர். ஆனால் ஏதோ பிரச்னை நடப்பது போன்று ப்ரோமோவில் காட்டப்படுகிறது. இதற்கு இல்லையா ஒரு எண்ட் கார்டு என்பது போல திரும்பவும் பிரச்னை வந்துவிட்டது. என்னவென்று அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம். வரவேற்பு நிகழ்வு வரை வந்ததே பாதி கடலை தாண்டியது போல தான், இனி ஓரிரு வாரங்களில் திருமண எபிசோட் வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from விகடன்

Comments