Mithun Chakravarthy: அறிமுக படத்தில் தேசிய விருது - மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது
70வது தேசிய திரைப்பட விருதுகள் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஏற்கெனவே எந்தெந்த திரைப்படங்களுக்கு தேசிய விருது என்பதையும் அறிவித்திருந்தார்கள். வருடந்தோறும் இந்த நிகழ்வில் உயரிய சினிமா ஆளுமை ஒருவரை தேர்ந்தெடுத்து 'தாதா சாகேப் பால்கே' விருதும் வழங்குவார்கள். இந்த விருதை தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், பாலசந்தர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பெற்றிருக்கின்றனர்.
2022-ம் ஆண்டிற்கான இந்த 'தாதா சாகேப் பால்கே' விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் இவர் இந்த விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.
1976-லிருந்து மிதுன் சக்ரவர்த்தி பாலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். நடிகராக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே மிதுன் சக்ரவர்த்தி தேசிய விருதை பெற்றார். தமிழிலும் 'யாகவாராயிணும் நா காக்க' என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். 48 வருடங்களாக பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் மிதும் சக்ரவர்த்தியின் சினிமா மீதான அர்பணிப்பை பாராட்டி இந்த உயரிய விருதை அறிவித்திருக்கிறார்கள்.
தகவல் மற்றும் தொடர்புதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர், "மிதுனின் சினிமா பயணம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்திருக்கிறது. 'தாதா சாகே பால்கே' விருதின் ஜூரிகள் மிதுன் சக்ரவர்த்தியின் சினிமா பங்களிப்பை பாராட்டி இந்த விருதுக்கு அறிவித்திருக்கிறார்கள்." என பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
from விகடன்
Comments