யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் ஷோ மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகரான இவருக்கு சினிமா வாய்ப்பும் வந்தது.
முதன் முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்தது இயக்குநர் நெல்சன்தான். நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிவப்பு மஞ்சள் பச்சை, பொன்மகள் வந்தாள், நட்பே துணை போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வந்த அவர் காலமாகி இருக்கிறார்.
நேற்று இரவு 9:00 மணிக்கு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் `குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்றிருந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் . சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
from விகடன்
Comments