Shah Rukh Khan: தன் புது வீட்டிற்குப் பெற்றோரின் பெயர் - நெகிழவைக்கும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்கள், ஐ.பி.எல் போட்டிகள் என எப்போதும் பிஸியாக இருக்கிறார். அவரது மகள் சுஹானா கான் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அமிதாப் பச்சன் குடும்பத்தில், அவரது மகள் வழிப்பேரனும் சுஹானா கானும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் சுஹானா அமிதாப் பச்சன் குடும்பத்தோடு வெளியில் புறப்பட்டுச் சென்ற காணொளி சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வெப் சீரியஸ் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆர்யன் கான் இயக்கி வரும் வெப் சீரியஸில் நடிகர் ஷாருக்கானும் நடித்திருக்கிறார். தற்போது ஆர்யன் கான் தெற்கு டெல்லியில் உள்ள பஞ்சசீல் பார்க் என்ற குடியிருப்பில் இரண்டு அபார்ட்மெண்ட்களை விலைக்கு வாங்கி இருக்கிறார். மொத்தம் ரூ.37 கோடிக்கு இந்த வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார். அதற்கு முத்திரை தீர்வையாக ரூ. 2.64 கோடி செலுத்தி இருக்கிறார். தற்போது ஆர்யன் கான் வீடு வாங்கி இருக்கும் கட்டிடத்தில் இதற்கு முன்பு ஷாருக்கானும், அவரது மனைவி கெளரி கானும் வாழ்ந்தனர். ஆர்யன் கான் வாங்கி இருக்கும் வீட்டிற்குத் தனது பெற்றோரின் பெயர்களை வைத்திருக்கிறார். அந்த வீட்டிற்குத் தேவையான இண்டீரியர் டிசைனிங் வேலைகளைக் கெளரி கான் முன்னின்று நடத்தி வருகிறார்.

ஷாருக்கானும், அவரது மனைவி கெளரி கானும்

இதே குடியிருப்பில் ஷாருக்கான் குடும்பத்திற்குத் தரைத்தளம் மற்றும் முதல் மாடி சொந்தமாக இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சினிமா தொடர்பாகப் படித்துவிட்டு வந்துள்ள ஆர்யன் கான் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் அறியப்பட்டார்.

ஆர்யன் கான் வெப் சீரியஸ் இயக்குவதோடு சொந்தமாக ஆடை பிராண்ட் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளார். அதில் ஷாருக்கான்தான் அதற்கு விளம்பர தூதராக இருக்கிறார். இது தவிர வோட்கா பிராண்ட் ஒன்றையும் ஆர்யன் கான் ஆரம்பித்து இருக்கிறார். இப்போதே ஆர்யன் கானுக்கு 80 கோடிக்குச் சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆர்யன் கான் வீடு வாங்கி இருக்கும் பகுதி டெல்லியின் தென் பகுதியில் இருக்கிறது. அங்கும், ராஷ்டிரபதி பவக்ச் சுற்றியும் சமீப காலமாக வீடுகள் அதிக அளவில் அதிக விலைக்கு விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



from விகடன்

Comments