`நாயகி' தொடரின் மூலம் மக்கள்மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். மருத்துவம் படித்து முடித்த அவர் தற்போது அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அந்தத் தொடருக்குப் பிறகு அவர் படிப்பிலேயே கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் வித்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், `பிறந்த நாள் வாழ்த்துகள் மை வேர்ல்டு' என்கிற கேப்ஷனையும் குறிப்பிட்டு அவருடைய காதல் கணவர் மைக்கேல் பிரதீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி இருக்கிறார். 13 வருட அழகான காதல் பயணம் குறித்தும் வித்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் வெளியான `கண்ணகி' திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
`பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் ஆர்யன். அந்தத் தொடருக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மீனாட்சி பொண்ணுங்க' தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ரசிகர்கள் மத்தியில் அந்தத் தொடர் குறித்த விவாதங்களும் அதற்கான வரவேற்புகளும் பரவலாய் இருந்தன. கதாநாயகியாக முதலில் கமிட் ஆன நடிகை மோக்ஷிதா அந்தத் தொடரிலிருந்து விலக அவருக்கு பதிலாக நடிகை செளந்தர்யா அந்தத் தொடரில் கதாநாயகியாக கமிட் ஆனார். `வீடு' அர்ச்சனா அந்தத் தொடரிலிருந்து விலக அவருக்கு பதிலாக ஶ்ரீரஞ்சனி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில் தற்போது அந்தத் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது. ஆர்யன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் இந்தத் தொடர் முடிவடைய இருக்கிறது என்கிற தகவலை பகிர்ந்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு `ஈரமான ரோஜாவே' தொடரில் நடித்திருந்தார். அந்தத் தொடர் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்நிலையில் தற்போது சன் டிவியில் புதியதாக வந்திருக்கும் `மருமகள்' தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
`வருணன்'என்கிற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கேப்ரில்லா என்ட்ரியாகி இருக்கிறார். 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். தற்போது இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. வாழ்த்துகள் கேப்ரில்லா.
from விகடன்
Comments