ஓலா மேப்ஸ்-க்கு போட்டியாக இந்தியர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது கூகுள் மேப்ஸ்

புதுடெல்லி: கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன. இதனால் இவைஇரண்டும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

ஓலா மேப்ஸ்-ஐ இந்திய நிறுவனங்கள் ஓராண்டு காலத்துக்கு இலவசமாக பயன்படுத்தலாம் எனஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களில் கூகுள் மேப்ஸ் பயன்பாட்டுக்கான கட்டணம் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து 70% குறைக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments