பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், மறைந்த ஏ.எல்.ராகவன் தம்பதியின் ஒரே மகளான நளினா சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது நலினாவின் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் அந்தக் கால நட்சத்திரத் தம்பதி எம்.என்.ராஜம், மறைந்த ஏ.எல்.ராகவன். 1950 - 1970 காலக் கட்டத்தில் பல பாடல்களைப் பாடியவர் ஏ.எல்.ராகவன்.
பாடகர் என்பதைத் தாண்டி சினிமா, சீரியல்களிலும் நடித்த இவர் கோவிட் பேரிடர் காலத்தில் இறந்துவிட்டார். எம்.என்.ராஜமும் 1950 -1970 காலக் கட்டத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர்.
கதாநயகி, வில்லி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கும் இவர்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்கிறார்கள். கணவர் மறைவுக்குப் பின் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள்.
மகள் நளினா, சரவணன் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த சரவணன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மைத்துனர். நளினாவின் மகன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறாராம். அவர் வந்த பின் நளினாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்கிறார்கள்
from விகடன்
Comments