Amala Paul: `Meet our little miracle'- தனக்கு மகன் பிறந்திருப்பதை அறிவித்த அமலா பால்!

நடிகை அமலா பால் - ஜகத் தேசாய் தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

‘மைனா' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா பால். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2014ம் ஆண்டு இயக்குநர் விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்திற்குப் பிறகு அமலா பால் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

அமலா பால்- ஜகத் தேசாய்

அவர் நடித்த 'ஆடை' திரைப்படம் அவருக்கு தமிழில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. அதன் பிறகு மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் தேதி ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களைப் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். கர்ப்ப காலத்தை கணவருடன் கொண்டாடி வந்த அமலா பால், அவ்வபோது போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை அமலா பால் - ஜகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 'Meet our little miracle' என்றும், ஜூன் 11ஆம் தேதி குழந்தை பிறந்தது என்றும் இருவரும் தங்களுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளனர். தங்களின் குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமலா பால்- ஜகத் தேசாய் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



from விகடன்

Comments