`உறவினர்தான் ஆனால்... சல்மான் கான் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ணத் தயங்குவது ஏன்?'- ஆயுஷ் ஷர்மா

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானின் கடைசித் தங்கையான அர்மிதா கான் ஷர்மாவைத் திருமணம் செய்து கொண்டவர் ஆயுஷ் ஷர்மா.

திரைத்துறையில் கதாநாயகனாக வலம் வர வேண்டும் என்ற ஆசை கொண்ட தன் தங்கையின் கணவரான ஆயுஷ் ஷர்மாவை, ‘லவ்யாத்ரி', ‘Antim: The Final Truth’ என்ற படங்களில் நடிக்க வைத்து, இப்படங்களைத் தானே தயாரித்தும் இருந்தார் சல்மான் கான். இந்த இரண்டு படங்கள் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஆயுஷ் ஷர்மா, தற்போது கரண் லலித் இயக்கத்தில் ‘Ruslaan’ என்ற படத்தில் நடித்துள்ளார். 

ஆயுஷ் ஷர்மா, அர்மிதா கான் ஷர்மா

இப்படத்தை சல்மான் கான் தயாரிக்கவில்லை. கே.கே. ராதாமோகன் தயாரித்திருக்கிறார். இதுவரை தனது மனைவியின் அண்ணான சல்மான் கான் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களில் நடித்த ஆயுஷ் ஷர்மா, ‘Ruslaan’ படத்தின் மூலம் தனது குடும்பப் பின்னணி இல்லாமல் திரைத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளார். 

இதுகுறித்துப் பேசியிருக்கும் ஆயுஷ் ஷர்மா, “ பல நடிகர்கள் தங்களுக்கு ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனம் கிடைத்துவிட்டால் அதிலேயே தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் பண்ணுவார்கள். அதன்பிறகு, தங்களின் இலகுவான வாடிக்கையை விட்டு வெளியே சென்று பணியாற்ற விரும்புவார்கள். அப்போதுதான் அவர்களின் திறைமையை வளர்த்துக் கொள்ள முடியும். எந்த நடிகரும் ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் படங்கள் பண்ண முடியாது.

ஆயுஷ் ஷர்மா, சல்மான் கான்,

அதுபோலத்தான் நானும் எனது கம்ஃபோர்ட்டை விட்டு, எனது குடும்பப் பின்னணியை விட்டு வெளியே சென்று படங்கள் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் நானும் என் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்..



from விகடன்

Comments