Aparna Das: `காதல் தான் மாறாதே!' மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்த அபர்ணா தாஸ்!

கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நியான் பிரகாஷன்' படத்தில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ்.

அதன் பிறகு தமிழில் விஜய் நடித்த `பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். தவிர கவின் நடிப்பில் வெளியான 'டாடா' படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். இதனிடையே அபர்ணா தாஸ் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பரை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

அபர்ணா தாஸ்- தீபக் பரம்போல் திருமணம்

நேற்று அவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  இணையத்தில் வைரலான நிலையில் இன்று அவர்களின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணப் புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.  சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அபர்ணா தாஸ்- தீபக் பரம்போல் ஜோடிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள்  இருவரும் மலையாளத்தில் வெளியான மனோகரம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from விகடன்

Comments