`மாதம் ரூ. 30,000 சம்பளம் டு தினமும் ரூ.3,000 சம்பளம்' - வைரல் டோரா `சிறகடிக்க ஆசை' அட்சய பாரதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை'. இந்தத் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் அட்சய பாரதி. கனடா ரிட்டர்ன் ஆக மீண்டும் சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்திருப்பவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
`சிறகடிக்க ஆசை' அட்சய பாரதி

"என்னுடைய ஊர் ஓசூர். காலேஜ் சென்னையில் படிச்சேன். இப்ப குடும்பத்தோடு பெங்களூரில் செட்டில் ஆகிட்டோம். சின்ன வயசுல இருந்தே எனக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். காலேஜ் முடிச்ச சமயம் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. வீட்ல சொன்னப்ப இதுக்காகவா உன்னை இன்ஜினீயரிங் படிக்க வச்சோம்.. ஒழுங்கா படிக்கிற வழியைப் பாருன்னு சொலிட்டாங்க. அதை மிஸ் பண்ணப்ப கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலன்னு வருத்தப்பட்டேன். அந்த வாய்ப்பை மிஸ் பண்ணதனால வீட்ல பொழம்பிட்டே இருந்தேன்.

அவங்க சொன்ன மாதிரி இன்டீரியர் டிசைனிங் கோர்ஸ் முடிச்சிட்டு இன்டீரியர் டிசைனர் ஆக வேலைக்குப் போயிட்டு இருந்தேன். மூணு வருஷம் வேலைக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தேன். கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகுறது எல்லாரும் பண்றது. எப்படினாலும் ஒருநாள் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறோம். வீட்ல பேசிடலாம்னு முடிவெடுத்தேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கலைன்னா ஓகே.. கிடைச்சதை நழுவ விட்டது எனக்கு உறுத்திட்டே இருக்கு.. என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னேன். வீட்ல புரிய வைக்க கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்கு பொறுமை ரொம்ப முக்கியம். நான் எடுத்துச் சொன்னேன். அவங்களும் என்னை புரிஞ்சுகிட்டாங்க. 2021 பிப்ரவரியில் வேலையை விட்டேன். கிடைச்ச சின்ன சின்ன வாய்ப்புகளையும் புறக்கணிக்காம பண்ணினேன்.

`சிறகடிக்க ஆசை' அட்சய பாரதி

முதலில் செந்தூரப்பூவே சீரியலில் ஃப்ரெண்ட் ரோல் கிடைச்சது. அதை பண்ணினேன். பொன்னியில் தான் எனக்குன்னு ஒரு கேரக்டர் கிடைச்சது. தொடர்ந்து இப்ப `சிறகடிக்க ஆசை', `முத்தழகு', `சின்ன மருமகள்' சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன்!" என்றவரிடம் `சிறகடிக்க ஆசை' ரீஎன்ட்ரி குறித்துக் கேட்டோம்.

"இப்ப உள்ள கெட்டப் ஐடியா முழுக்க முழுக்க டைரக்டர் சாருடையது. மேனேஜர் என்கிட்ட நீங்க கனடா ரிட்டர்ன்.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி இருக்கணும்னு சொன்னாங்க. முதலில் ஹேர் கலரிங் பண்ண சொன்னாங்க. ஓகே சொன்னேன். பிறகு, ஷார்ட் ஆக ஹேர்கட் பண்ண முடியுமான்னு கேட்டாங்க. ரெண்டு புராஜக்ட் போகிறதால முடியாதுன்னு சொல்லவும் விக் வைக்கலாம்னு சொன்னாங்க. அங்க போனப்ப ரெண்டு விக் இருந்தது. திடீர்னு இந்த விக் வச்சிட்டு இது ஓகேன்னு டைரக்டர் சார் சொல்லிட்டாங்க. அது `டோரா' மாதிரி ஆகிடுச்சு. பிரியாவும் செட்ல டோரான்னு கலாய்ச்சிட்டே தான் இருந்தாங்க. ப்ரொமோ ரிலீஸ் ஆனதுல இருந்து எல்லாரும் இந்த ஹேர் ஸ்டைலை கிண்டல் பண்றாங்க. அந்த ட்ரோலை நானும் ஜாலியா எடுத்துக்கிறேன்!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

`சிறகடிக்க ஆசை' அட்சய பாரதி

"இன்டீரியர் டிசைனர் ஆக இருந்தப்ப மாசம் 35-40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சிட்டு இருந்தேன். இங்க வந்தப்ப ஒரு நாளைக்கு 3000 ரூபாய் கொடுத்தாங்க. படிப்பு இருக்கு.. ஒருவேளை இங்க முயற்சி பண்ணி வாய்ப்பு கிடைக்கலைன்னா பார்த்துக்கலாம் அப்படிங்கிற எண்ணத்துல தான் இந்த ஃபீல்டுக்குள்ள வந்தேன்!" என்றவரிடம் தவறவிட்ட தொடர் குறித்துக் கேட்டோம்.

"விஜய் டிவியில் வெளியான `மாப்பிள்ளை' தொடரில் கடைசி தங்கச்சியா நான் நடிக்க வேண்டியது. திங்கள் கிழமை ஷூட்னா வெள்ளிக்கிழமை ஃபோன் பண்ணி வரலைன்னு சொன்னேன். அது பண்ணியிருந்தா இன்னைக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்திருப்பேன். அந்த சீரியலில் எனக்கு பதிலாக வைஷாலி தனிகா நடிச்சிருந்தாங்க. இப்ப அவங்க கூடவே `முத்தழகு' தொடரில் நடிக்கிறேன். எங்க விட்டோமோ அங்கேயே வந்துட்டோம்னு அதுவே சந்தோஷத்தைக் கொடுக்குது!" என்றவரிடம் சிறகடிக்க ஆசை பற்றிக் கேட்டோம்.

`சிறகடிக்க ஆசை' அட்சய பாரதி

"சிறகடிக்க ஆசை டீம்ல எனக்கு குளோஸ்னா மனோஜ்தான். அவர் உண்மையாகவே நல்ல மனுஷன். அவர் ஒரு விஷயத்தை ஃபாலோ பண்றது மட்டுமில்லாம நமக்கும் சொல்லுவார். மனோஜ் மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சதுக்கு நான் லக்கின்னு தான் சொல்லணும். இனி சீரியலில் நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் வரப் போகுது. எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடக்கப் போகுது. இதுக்கு முன்னாடி நான் நடிச்ச சீரியல் எனக்கு கொடுத்த ரீச் விட சிறகடிக்க ஆசை கொடுத்த ரீச் பெருசு. எனக்கு சிறகடிக்க ஆசை ரொம்பவே ஸ்பெஷல்! எனக்கு அந்த சீரியல் கிடைச்சதுக்கு நான் லக்கின்னு நினைக்கிறேன்!" எனப் புன்னகைத்தவர் சமீபத்தில் வெளியான `கண்ணகி' திரைப்படத்திலும் நடித்திருந்தார். சினிமா, சீரியல் என கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம். இதை தவிர மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் அவர்... இதை வீடியோ வடிவில் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்



from விகடன்

Comments