``ஆம்... அக்‌ஷய் குமாருக்கும் எனக்கும் 30 வயது வித்தியாசம்!"- விமர்சனங்களுக்கு மனுஷி சில்லார் பதில்

2017ம் ஆண்டு மிஸ் வோர்ல்ட் பட்டத்தை வென்ற இந்தியப் பெண் மனுஷி சில்லார்.

திரைத்துறையில் நடிகையாக வலம் வர விரும்பிய இவர், தன் முதல் படத்திலேயா பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமாருடன் ‘சாம்ராட் பிருத்விராஜ்' என்ற பீரியாடிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது.

மானுஷி, அக்‌ஷய் குமார்

இதையடுத்து தற்போது மீண்டும் அக்‌ஷய் குமாருடன் ‘Bade Miyan Chote Miyan’ நடித்திருக்கிறார். கடந்த வாரம் ஏப்ரல் 11ம் தேதி வெளியான இத்திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் குறித்த ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் சிலர், 26 வயதாகும் மனுஷி சில்லார், 56 வயதாகும் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மனைவியாக நடித்திருப்பதைக் கேலி செய்து வருகின்றனர்.

இது குறித்து சமீத்திய நேர்காணல் ஒன்றில் வெளிபடையாகப் பேசியிருக்கும் நடிகை மானுஷி சில்லார், “எனக்கும் அக்‌ஷய் குமார் சாருக்கும் 30 வயது வித்தியாசம் இருப்பதாகவும், அவரின் மனைவியாக நடித்தது குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் கேலி செய்வதைப் பார்த்தேன். எனக்காக இங்கு நான்தான் பேசியாக வேண்டும். இந்த விமர்சனங்களுக்கு நானே பதிலளிக்கிறேன். அக்‌ஷய் குமார் சார் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை இங்கு யார் வேண்டாம் என்று நிராகரிப்பார்கள். அதுமட்டுமின்றி படக்குழுவினர் நன்றாக யோசித்து கதைக்கேற்றவாறுதான் நடிகர்களைத் தேர்வு செய்கிறார்கள். 

அக்‌ஹய் குமார், மானுஷி

அதுமட்டுமின்றி அக்‌ஷய் குமார் சாருடன் நடிக்கும்போது எங்களுக்கிடயான வயது வித்தியாசங்களெல்லாம் தெரியவில்லை. இருவரும் ஜாலியாக சேர்ந்து பணியாற்றினோம்" என்றார். இதையடுத்து ரன்பீர் கபூருடன் ‘அனிமல்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் குறித்துப் பேசியவர், “அப்படியேதும் வாய்ப்புகள் எனக்கு வரவில்லை. ‘அனிமல்’ படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அப்படத்தில் ராஷ்மிகா மந்தனா சிறப்பாகவே நடித்திருந்தார். அக்கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று பேசியிருக்கிறார்.



from விகடன்

Comments