Wordpress, Tumblr பயனர் விவரங்களை ஏஐ நிறுவனத்துக்கு விற்க முடிவு

சான் பிரான்சிஸ்கோ: Wordpress மற்றும் Tumblr போன்ற தளங்களின் தாய் நிறுவனமான ‘ஆட்டோமேட்டிக்’ நிறுவனம், தங்களது பயனர் விவரங்களை ஓபன் ஏஐ, மிட்ஜெர்னி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த ஏஐ நிறுவனங்கள் பயிற்சி ரீதியான பணிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது.

கடந்த 2022-ல் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த டாக் உலக மக்கள் மத்தியில் பரவலானது. ஏஐ டூல்களின் இயக்கத்துக்கு பெரிய அளவிலான டேட்டாக்கள் தேவை. இப்போது வரையில் இந்த டேட்டாக்கள் இணையவெளியில் இருந்து திரட்டப்பட்டு வருகிறது. அதனால் படைப்பாளிகள் மற்றும் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை தங்களுக்கே தெரிவிக்காமல் ஏஐ நிறுவனங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments