"அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. நான் வேறு ஒருவரை டேட்டிங் செய்கிறேன்!" - கடுப்பான கங்கனா ரணாவத்

சமூகவலைதள டிரெண்டில் தன்னைத் தொடர்ந்து பேசுபொருளாகவே வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.

அரசியல் விமர்சனங்கள், டேட்டிங் சர்ச்சைகள், நெட்டிசன்களின் கமென்டுகளுக்குப் பதிலளிப்பது என சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து கொண்டிருக்கிறார் கங்கனா. தினமும் புது புது சர்ச்சைகளைத் தானாகவே அள்ளித் தலையில் போட்டுக்கொள்வது அவரது வழக்கம்.

சமீபத்தில் 'மேக் மை ட்ரிப்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நிஷாத் பிட்டியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்.

கங்கனா, நிஷாத் பிட்டி

அயோத்தி ராமர் கோயில் விழாவிலும் இருவரும் ஜோடியாக இருக்கும் காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதைக் கண்ட அவரது ரசிகர்கள் பலரும் கங்கனா, நிஷாத் பிட்டி இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஒரு சில இந்தி ஊடகங்களிலும் இது செய்திகளாக வெளிவந்தன.

இந்நிலையில் "வதந்திகளைப் பரப்ப வேண்டாம். நான் நிஷாத் பிட்டியுடன் டேட்டிங்கில் இல்லை, வேறு ஒருவரைத்தான் டேட் செய்கிறேன்" எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார் கங்கனா.

கங்கனாவின் இன்ஸ்டா ஸ்டோரி

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், "தயவுசெய்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். நிஷாத் பிட்டி ஏற்கெனவே திருமணமானவர். நான் அவருடன் டேட்டிங்கில் இல்லை, வேறு ஒருவரைத்தான் டேட் செய்து வருகிறேன். அவர் யார் என்பதைச் சொல்வதற்குச் சரியான நேரம் வரும். அதுவரை காத்திருங்கள். அதற்குமுன் எங்களைச் சங்கடப்படுத்த வேண்டாம். போட்டோ எடுத்தற்காகவெல்லாம் தினமும் ஒரு பெண்ணை புது புது ஆண்களுடன் சேர்த்து வைத்து தவறாகப் பேசவேண்டாம்" என்று கூறியுள்ளார்.



from விகடன்

Comments